நடிகை திரிஷா ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்ததன் மூலம் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படம் மெளனம் பேசியதே. அமீர் இயக்கிய இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. இதையடுத்து விக்ரம் உடன் சாமி, விஜய்க்கு ஜோடியாக கில்லி, திருப்பாச்சி, அஜித்துடன் கிரீடம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
திரிஷாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா தான். கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜெஸ்ஸி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் திரிஷா. குறிப்பாக இப்படத்தில் சிம்பு - திரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அப்படம் காலம் கடந்து கொண்டாடப்படுவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
96 படத்துக்கு திரிஷா நடிக்க கமிட் ஆன பிரம்மாண்ட படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் குந்தவை என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் திரிஷா. முதலில் இந்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போனதால், அந்த வாய்ப்பு திரிஷாவுக்கு வந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட திரிஷா, இவரை விட யாராலும் குந்தவையாக நடிக்க முடியாது என சொல்லும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக அந்த கேரக்டரில் நடித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 பாகத்திலும் நடிக்க நடிகை திரிஷா வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் பாகத்திற்காக ரூ.2.5 கோடி. 2-ம் பாகத்திற்காக ரூ.3 கோடி என மொத்தமாக ரூ.5.5 கோடி சம்பளமாக வாங்கினாராம். தற்போது நடிக்கும் இளம் ஹீரோயின்கள் ஒரு படம் ஹிட்டானாலே ரூ.5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் இந்த காலகட்டத்தில் நடிகை திரிஷா குந்தவையாக நடிக்க வெறும் ரூ.5.5 கோடி மட்டுமே வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஹாட்ரிக் ஹிட் கொடுக்க ரெடியான விஷால் - ஹரி கூட்டணி... டாக்டரா? டான்-ஆ? போஸ்டரே மெர்சலா இருக்கே..!