Trisha : டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா... நடிகை த்ரிஷா போட்ட சூசக பதிவு வைரல்

Published : Aug 12, 2026, 07:01 AM ISTUpdated : Aug 12, 2026, 01:01 PM IST

Trisha Cryptic Post : நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரையோ குறிப்பிடும் விதமாக போட்டுள்ள சூசக பதிவு செம வைரலாகி வருகிறது. அதில் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Trisha Cryptic Post

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கு தொடர்பாக கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷாவின் பெயரும் அவ்வப்போது பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது சங்கீதா, விஜய் மீது தொடர்ந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரண்டு பதிவுகள் வைரலாகி வருவதோடு, இணையத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Vijay Trisha: காதலித்தும் கல்யாணம் செய்யாத விஜய்-த்ரிஷா.! தடையாக இருந்த அந்த நபர்..! குட்டி பத்மினி ஓபன் டாக்!

24
த்ரிஷா போட்ட சூசக பதிவு

விஜய்க்கு எதிராக சங்கீதா சொர்ணலிங்கம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அவர் சமீபத்தில் திரும்பப் பெற்றார். இந்த நிகழ்வு நடந்த சில நாட்களிலேயே த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவுகள்தான் தற்போது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. த்ரிஷா பகிர்ந்த முதல் பதிவில், “இந்த வயதில் நாடகம் போடுவது வெட்கக்கேடானது... போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து, நிம்மதியாக இருங்கள்” என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. அதனுடன் அவர் ஒரு எமோஜியையும் சேர்த்திருந்தார். ஆனால், இந்தப் பதிவு யாரை மனதில் வைத்து பகிரப்பட்டது என்பது குறித்து த்ரிஷா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Trisha Kishnan: 44 வயதில் தான் வாழ்க்கை தொடங்குகிறது.! தனுஷ் பிறந்தநாளில் த்ரிஷா போட்ட பதிவு.!

34
நெட்டிசன்கள் யூகம்

அதேபோல், மற்றொரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியையும் அவர் ரீ-ஷேர் செய்திருந்தார். ‘தீய கண்’ எமோஜியுடன் பகிரப்பட்ட அந்தப் பதிவில், “ஒரு காலத்தில் நீங்கள் வேண்டிக்கொண்ட வாழ்க்கையில் இன்று முழுமையாக மூழ்கிப்போய் இருப்பது எவ்ளோ பெரிய வரம்” என்ற கருத்து இடம்பெற்றிருந்தது. த்ரிஷா போட்ட இந்த இரண்டு பதிவிலும் அவர் யாரையும் குறிப்பிடாவிட்டாலும் தற்போதைய சூழலுடன் அதனை ஒப்பிட்டு, அவர் விஜய் - சங்கீதாவை தான் குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கள் பல்வேறு யூகங்களை கிளப்பி வருகிறார்கள்.

Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!

44
விவாதப் பொருளாக மாறிய பதிவு

நடிகை த்ரிஷா, கடந்த சில மாதங்களாக போட்ட பதிவுகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிய வண்ணம் உள்ளன. குறிப்பாக ஏஜிஎஸ் இல்லத்திருமண விழாவில் விஜய்யும், த்ரிஷாவும் ஜோடியாக வந்து கலந்துகொண்டனர். அதுவும் இருவரும் மேட்சிங் ஆக உடை அணிந்திருந்தனர். அதன் பின்னர் விஜய் முதல்வர் ஆனதும் அவரை முதல் ஆளாக சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார் த்ரிஷா. பின்னர் விஜய்யின் பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு அவரது வீட்டில் வைத்து கொண்டாடினார் த்ரிஷா. இப்படி அவர் போட்ட பதிவுகள் தொடர்ந்து வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay Trisha: நைட்டு 12 மணிக்கு; முதல்வர் விஜய் வீட்டில் த்ரிஷா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க... வைரலாகும் பர்த்டே போஸ்ட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories