திரிஷா கோபமடைந்தது ஏன்?
சரி, திரிஷாவுக்கு இம்புட்டு கோபம் வர்ற அளவுக்கு என்ன செய்தார்கள் என்று தானே கேட்கிறீர்கள். அவரின் இந்த கோபத்துக்கு காரணம் நயன்தாரா ரசிகர்கள் தானாம். குட் பேட் அக்லி படத்தில் திரிஷாவின் நடிப்பை பாராட்டும் விதமாக அவரது ரசிகர்கள், ஒரே ஒரு லேடி சூப்பர்ஸ்டார் தான்.. அது எங்க திரிஷா மட்டும் தான் என பதிவிட, இதற்கு பதிலடி கொடுத்து நயன்தாரா ரசிகர்கள், குட் பேட் அக்லியில் திரிஷா நடிப்பு மோசம் என விமர்சித்ததோடு, 20 வருஷமா சினிமாவில் நடித்தும் சொந்தக் குரலில் டப்பிங் பேச தெரியல. நடிப்பும் அவருக்கு வரல என ரிப்ளை கொடுத்தனர். இதனால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே சோசியல் மீடியாவில் மோதல் வெடித்தது.