Toxic Box Office : கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன டாக்ஸிக் திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தென்னிந்திய சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கிய புதிய படமான 'டாக்ஸிக்' ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கன்னடம், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து எழுதிய இந்தத் திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தற்போது, 'டாக்ஸிக்' திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது. இதுவரை மொத்தமாக 285 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சாக்னில்க் இணையதளம் தெரிவித்துள்ளது.
டாக்ஸிக் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்தியாவில் ரூ.23 கோடி வசூலித்துள்ளது. இதில் அதிகபட்சமாக அப்படத்தின் இந்தி பதிப்பு ரூ.14.50 கோடி வசூலை அள்ளி உள்ளது. அடுத்ததாக கன்னட பதிப்பு ரூ.6.40 கோடியும், மலையாள பதிப்பு ரூ.10 லட்சமும், தமிழ் வெர்ஷன் ரூ.60 லட்சமும், தெலுங்கு வெர்ஷன் ரூ.1.40 கோடியும் வசூலித்துள்ளது. டாக்ஸிக் படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்து அதன் குறைந்தபட்ச வசூல் இதுதான். இனி வார நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் சரியக்கூடும்.
35
டாக்ஸிக் பட கதை
அதிகார மாற்றம் நடைபெறும் ஒரு அபாயகரமான உலகத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை நகர்கிறது. உறவுகள் மற்றும் மோதல்கள்தான் படத்தின் முக்கிய கரு. குற்றம், ஆசை, குடும்பம், விசுவாசம், துரோகம், அதிகாரம் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த ஒரு கதைக்களத்தை 'டாக்ஸிக்' கொண்டுள்ளது. தனிப்பட்ட உறவுகளையும், அதிகாரத்திற்கான பெரிய போராட்டங்களையும் பிரிக்க முடியாத ஒரு உலகத்தை இந்தப் படம் காட்டுகிறது. இந்திய சினிமாவில் இருந்து உலக சினிமா அரங்குக்கு கீது மோகன்தாஸ் எடுத்து வைத்துள்ள ஒரு முக்கியமான அடியாக 'டாக்ஸிக்' பார்க்கப்படுகிறது.
படத்தின் பிரம்மாண்டம் மட்டும் இதன் சிறப்பம்சம் அல்ல. கீது மோகன்தாஸ், கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாக்கியுள்ள தனித்துவமான உலகமும் படத்தின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. தனது முந்தைய படங்கள் மூலம் தீவிரமான தனிப்பட்ட கதைகளையும், வித்தியாசமான கதை சொல்லும் பாணியையும் வெளிப்படுத்திய கீது, 'டாக்ஸிக்' மூலம் ஒரு பரந்த கதைக்களத்திற்குள் நுழைந்துள்ளார். கதாபாத்திரங்களின் ஆழத்தையும், மனித உணர்வுகளையும் அப்படியே வைத்துக்கொண்டு, ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் விஷுவல் பிரம்மாண்டம் நிறைந்த ஒரு பெரிய கேங்ஸ்டர் டிராமாவாக இதை உருவாக்கியுள்ளார்.
55
டாக்ஸிக் படக்குழு
நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் உள்ளது. ராயா மற்றும் டிக்கெட் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றியுள்ள சிக்கலான உலகத்திற்கு இவர்களின் கதாபாத்திரங்கள் மேலும் வலு சேர்க்கின்றன. தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி (ஒளிப்பதிவு), ரவி பஸ்ரூர் (இசை), உஜ்வல் குல்கர்னி (எடிட்டிங்), டி.பி. ஆபித் (தயாரிப்பு வடிவமைப்பு) என தொழில்நுட்பக் குழுவும் மிரட்டுகிறது. ஆக்ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குனர் ஜே.ஜே. பெர்ரி ('ஜான் விக்' புகழ்), தேசிய விருது பெற்ற அன்பறிவ் மற்றும் கேச்சா கம்பாக்டி ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர். வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ் பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.