பட்ஜெட்டை விட 200 மடங்கு அதிக வசூல்; 2025-ல் அதிக லாபம் தந்த தமிழ் படம் பற்றி தெரியுமா?

Published : May 19, 2025, 08:55 AM IST

2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் கம்மி பட்ஜெட்டில் ரிலீஸ் ஆன படம் ஒன்று, போட்ட காசைவிட 200 மடங்கு அதிகம் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ளது.

PREV
14
Most Profitable Tamil Movie in 2025

2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஏற்ற இறக்கத்தோடு சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் மாதத்திற்கு ஒரு ஹிட் படம் தவறாமல் வந்துவிடுகிறது. அந்த வகையில் ஜனவரி மாதம் மதகஜராஜா, குடும்பஸ்தன் என இரண்டு வெற்றிப்படங்கள் வந்தன. அதேபோல் பிப்ரவரியில் டிராகன் படமும், மார்ச் மாதம் வீர தீர சூரன் படமும் வெற்றிபெற்றன. ஏப்ரலில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் வேட்டையாடியது. இந்நிலையில், இந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டித் தந்த படமொன்றை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

24
அதிக லாபம் ஈட்டிய தமிழ் படம் எது?

அது வேறெதுவுமில்லை இந்த ஆண்டு மே 1ந் தேதி ரிலீஸ் ஆன டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தான். இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்த இப்படத்தில் யோகிபாபு, கமலேஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். இப்படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்நிறுவனம் ஏற்கனவே குட் நைட், லவ்வர் போன்ற ஹிட் படங்களை தயாரித்திருந்தது.

34
டூரிஸ்ட் பேமிலி கதை என்ன?

இலங்கையில் இருந்து அகதிகளாக கள்ளப் படகில் இந்தியாவுக்கு வரும் சசிகுமாரின் குடும்பம், தாங்கள் இலங்கைத் தமிழர்கள் என்கிற அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் அவர்களை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அவர்கள் சிக்கினார்களா? தப்பித்தார்களா? என்பதே படத்தின் கதை. கதை சிம்பிளாக இருந்தாலும் அதை படமாக்கிய விதம் தான் டூரிஸ்ட் பேமிலி படத்தை மாஸ்டர் பீஸ் படமாக மாற்றியது.

44
பட்ஜெட்டைவிட 200 சதவீதம் அதிகம் வசூலித்த டூரிஸ்ட் பேமிலி

டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் தான் தயாரிக்கப்பட்டது. ஆனால் இப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. ரிலீஸ் ஆகி மூன்று வாரங்களைக் கடந்து வெற்றிநடைபோட்டு வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனாலும் பாக்ஸ் ஆபிஸீல் பட்டைய கிளப்பி வருகிறது டூரிஸ்ட் பேமிலி.

டூரிஸ்ட் பேமிலி படம் தான் இந்த ஆண்டின் அதிக லாபம் ஈட்டிக் கொடுத்த படமாகும். இப்படம் பட்ஜெட்டைவிட 200 சதவீதம் அதிகம் லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி ரெட்ரோ படத்தைக் காட்டிலும் திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த படமும் டூரிஸ்ட் பேமிலி தான்.

Read more Photos on
click me!

Recommended Stories