Abishan Jeevinth : ஹீரோவாக அறிமுகமாகும் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்!

Published : Jul 05, 2025, 11:43 AM IST

2025-ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம்.

PREV
14
Abishan Jeevinth Debut as Hero

தமிழ் சினிமாவில் 2025-ம் ஆண்டு அஜித், சூர்யா, கமல்ஹாசன், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தாலும், அந்த படங்களையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஏகோபித்த வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது டூரிஸ்ட் ஃபேமிலி தான். இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இதில் சிம்ரன், சசிகுமார், யோகிபாபு, கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் கடந்த மே மாதம் 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று ரிலீஸ் ஆனது. அன்றைய தினம் நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படமும் ரிலீஸ் ஆனதால் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது.

24
பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்த டூரிஸ்ட் ஃபேமிலி

ஒரு நல்ல படத்துக்கு புரமோஷன் தேவையில்லை... அதற்கான இடத்தை அதுவே தேடிக்கொள்ளும் என நடிகர் அஜித் குமார் கூறி இருப்பார். அதுபோலவே டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் ரிசல்டும் அமைந்தது. ரெட்ரோ என்கிற பிரம்மாண்ட படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனாலும். இப்படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், நாளுக்கு நாள் டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு மவுசு அதிகரித்தது. இப்படம் உலகளவில் ரூ.90 கோடி வசூலித்து இந்த ஆண்டு அதிக லாபம் ஈட்டித் தந்த படம் என்கிற சாதனையையும் படைத்தது. இப்படத்தை வெறும் 15 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருந்தனர்.

34
அபிஷன் ஜீவிந்துக்கு குவிந்த பாராட்டு

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பார்த்த பலரும் வியந்து பாராட்டியது அப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை தான். அவர் இயக்கிய முதல் படம் இதுதான். ஆனால் பார்ப்பதற்கு அதுபோல் தெரியவில்லை என்று பலரும் பாராட்டினார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி ஒரு முக்கியமான ரோலில் நடித்தும் இருந்தார் அபிஷன். அவரின் கதாபாத்திரம் படத்தில் மிகவும் எமோஷனலான ஒன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்துவிட்டார் அபிஷன். இப்படி இயக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அசத்தி பாராட்டுக்களை பெற்றார் அபிஷன்.

44
ஹீரோவாகிறார் அபிஷன் ஜீவிந்த்

இந்நிலையில், அவர் அடுத்ததாக ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாக உள்ள படத்தை அவருடன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய் ஒருவர் தான் இயக்க உள்ளாராம். அப்படத்திற்கு கரெக்டட் மச்சி என பெயரிடப்பட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் முதல் படமான கோமாளியில் சின்ன கேமியோ ரோலில் நடித்த பின்னர், அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். தற்போது அபிஷன் ஜீவிந்தும் அந்த ரூட்டில் பயணிக்கிறார். பிரதீப்பை போல் அவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories