சூர்யா நடித்த ரெட்ரோ படமும், சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று ரிலீஸ் ஆனது. இதில் ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். அப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்து இருந்தனர். அதேபோல் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் சார்பாக யுவராஜ் தயாரித்து இருந்தார்.
24
ரெட்ரோ பாக்ஸ் ஆபிஸ்
ரெட்ரோ படம் சுமார் 65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்ததால் நல்ல ஓப்பனிங்கும் கிடைத்தது. இதனால் ரெட்ரோ திரைப்படம் ரிலீஸ் ஆன ஐந்து நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை எட்டியது. சூர்யாவின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய திரைப்படம் என்கிற சாதனையையும் ரெட்ரோ படைத்துள்ளது.
34
டூரிஸ்ட் பேமிலி வசூல் நிலவரம்
மறுபுறம் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெறும் 7 கோடி பட்ஜெட்டில் தான் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். இப்படம் ஆரவாரம் இன்றி ரிலீஸ் ஆனாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால், நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரிக்க தொடங்கியது. இப்படம் ஒரே வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.25 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தது. நடிகர் சசிகுமாரின் கெரியரில் அவர் ஹீரோவாக நடித்து அதிக வசூல் அள்ளிய படம் டூரிஸ்ட் பேமிலி.
முதல் வாரம் ரெட்ரோ திரைப்படம் ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், இரண்டாவது வாரம் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தான் வசூலில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி 10வது நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி, ரெட்ரோ திரைப்படம் தமிழ்நாட்டில் வெறும் ரூ.1.10 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. ஆனால் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 10வது நாளில் ரெட்ரோவை விட 4 மடங்கு அதிகமாக வசூலித்து கெத்து காட்டி உள்ளது. அப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் நேற்று மட்டும் ரூ.5 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது.