ஒரே வருடம்; அடுத்தடுத்து 4 சில்வர் ஜூப்ளி ஹிட் படங்களை கொடுத்த தமிழ் நடிகர் - யார் அவர் தெரியுமா?

First Published | Nov 9, 2024, 4:47 PM IST

Kollywood Hero : தமிழ் சினிமாவை பொறுத்தவரை இன்று ஒரு திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்து விட்டாலே அது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் 1980களின் துவக்கத்தில் தமிழ் சினிமா அப்படி இல்லை.

Tamil Heroes

ஒரு நூற்றாண்டையும் கடந்து பயணித்து வருகிறது தமிழ் சினிமா என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு பழமை வாய்ந்த ஒரு சினிமாத்துறை இது. மேலும் இப்படி நூறு ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக தமிழ் சினிமா பயணிக்க காரணம், அதில் இருந்த மற்றும் இருக்கின்ற கலைஞர்கள் தான் என்றால் அது கொஞ்சம் கூட மிகையல்ல. கடந்த 1944ம் ஆண்டு, தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் எம்.கே தியாகராஜ பாகவதர் மற்றும் டி.ஆர் ராஜகுமாரி நடிப்பில் வெளியான "ஹரிதாஸ்" என்கின்ற திரைப்படம் சுமார் 133 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அதாவது அப்போதைய மெட்ராஸில் இருந்து "பிராட்வே சன் தியேட்டர்ஸ்" திரையரங்கில் மட்டும் கிட்டத்தட்ட 3 தீபாவளிகளை கடந்து இந்த திரைப்படம் பயணித்திருக்கிறது.

சமந்தா திருமணத்தில் மணமகள் யார் என்பதை மறந்து சோபிதா செய்த சேட்டையை நீங்களே பாருங்கள்!

VTV Movie

கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு மற்றும் நடிகை திரிஷா நடித்து, 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படம், சென்னை வி.ஆர் மாலில் உள்ள பிவிஆர் திரையரங்கில் சுமார் 834 நாட்கள் தொடர்ச்சியாக ஓடி ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம், சென்னை சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்திருக்கிறது. இப்படி தமிழ் சினிமா சாதனைகளுக்கு பஞ்சம் இல்லாத ஒரு திரையுலகம் என்றே கூறலாம். இந்த திரை உலகில் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மிகச்சிறந்த திரைக்கலைஞன் பயணித்து வருகிறார்.

Tap to resize

Kamal

அந்த திரை கலைஞன் தான் நடிகனாக, இயக்குனராக, பாடகராக, இசையமைப்பாளராக, விநியோகஸ்தராக, மேக்கப் கலங்கராக, இன்னும் பல ரூபங்களில் தன்னுடைய திறமைகளை கடந்த 65 ஆண்டுகளாக நிரூபித்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன். அந்த இணையற்ற கலைஞன் தான் 1982 ஆம் ஆண்டு ஒரு மிகச் சிறந்த சாதனையை படைத்திருக்கிறார். அந்த ஒரே ஆண்டில் அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய நடிப்பில் அடுத்தடுத்து வெளியான மூன்று தமிழ் திரைப்படங்களும், ஒரு ஹிந்தி திரைப்படமும் சில்வர் ஜூப்ளி திரைப்படங்களாக மாறியிருக்கிறது.

Kamalhaasan

அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் 1982ம் ஆண்டு நரேந்திர பேடி என்பவருடைய இயக்கத்தில் மே மாதம் ஆறாம் தேதி வெளியான சனம் தேரி கசம் என்கின்ற திரைப்படம் சுமார் 369 நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. அதேபோல கமலஹாசன் நடிப்பில் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியான வாழ்வே மாயம் திரைப்படம் 108 நாட்களைக் கடந்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. அதே 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியான எஸ்.பி முத்துராமனின் சகலகலா வல்லவன் திரைப்படம் சுமார் 110 நாட்கள் ஓடி மெகா ஹிட் படமாக மாறியது. 1982 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை திரைப்படம் தமிழக அளவில் 200 நாட்களை கடந்து ஓடி சில்வர் ஜூப்ளி திரைப்படமாக மாறியது.

'அமரன்'-னுக்கு இசையால் வலு சேர்த்த ஜிவி! சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்டலி வாட்ச்; எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!