தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களிலும், ராஜ ராஜ சோழனின் காதலி, வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. தமிழ் மட்டும் இன்றி, டோலிவுட், மற்றும் பாலிவுட் திரையுலகிலும் இவர் கவனம் செலுத்தி வரும் நிலையில், விரைவில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது மனைவியாக மாற உள்ளார்.
25
Sobhita Dhulipala Engagement
சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம், கடந்த ஆகஸ்ட் 8, 2024 அன்று... மிகவும் எளிமையான முறையில், நாகர்ஜூனாவின் வீட்டில் குடும்ப முறைப்படி நடந்தது. இவர்கள் இருவரின் திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் சூடு பிடிக்க துவங்கியுள்ள நிலையில், நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் டேட்டிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மேலும் நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிவதற்கு, சோபிதா தான் காரணம் என்றும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்து சோபிதா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்பட வில்லை. சமந்தாவும் இவர்கள் இருவரின் திருமணம் குறித்த தகவல் வெளியானபோது பெரிதாக ரியாக்ட் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
45
Sobhita Dhulipala Goofy Reaction
அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் சோபிதா துலிபாலா அவருடைய தங்கை திருமணத்தில் புகைப்பட கலைஞருக்கு குறும்புத்தனமான நையாண்டி காட்டிய போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.
திருமணம் ஆக உள்ள மணமகன் மற்றும் மணமகள் இருவருமே... போட்டோவுக்கு போஸ் கொடுக்காத நிலையில், ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாலும், தன்னை முன்னிலை படுத்தி கொண்டு சோபிதா செய்த இந்த சேட்டை பார்ப்பவர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை பார்த்து நெட்டிசன்கள் சிலர் திருமணம் உங்களுக்கு அல்ல உங்கள் தங்கை சமந்தாவுக்கு தான் என இந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட் செய்து வருவருகின்றனர்.