இப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை, சுமார் 200 கோடிக்கு வசூல் செய்துள்ள நிலையில் படக்குழுவினர் அனைவரும் இப்படத்தின் வெற்றியால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தின் கதை மட்டும் இன்றி, கதையோடு பயணிக்கும் இசை, BGM, பாடல்களும் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில், 'அமரன்' பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் TAG Heuer என்கிற நிறுவனத்தின் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். இந்த வாட்ச், சுமார் 1 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.