13 வருட தவம்; நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வயிற்றுடன் வித்யா பிரதீப்! குவியும் வாழ்த்து!

Published : Nov 09, 2024, 01:00 PM ISTUpdated : Nov 09, 2024, 01:18 PM IST

நடிகை வித்யா பிரதீப், திருமணம் ஆகி 13 வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  

PREV
16
13 வருட தவம்;  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வயிற்றுடன் வித்யா பிரதீப்! குவியும் வாழ்த்து!
Vidya Pradeep

கேரளாவை சேர்ந்த நடிகை வித்யா பிரதீப், பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளிநாட்டில் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார். சிறுவயதில் இருந்தே மாடல் மற்றும் நடிகையாகவேண்டும்  என்கிற கனவு இவருக்கு இருந்ததால் படித்துக்கொண்டே நடிப்பிலும் சாதித்து காட்டினார்.

26
Vidya Pradeep Debut Movie

வித்யா பிரதீப் கடந்த 2010 ஆம் ஆண்டு, இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில், ஜெய் நடிப்பில் வெளியான 'அவள் பெயர் தமிழரசி' படத்தில் டான்ஸர் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் தன்யா என்கிற சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தாலும், இவரின் நடிப்பு மற்றும் நடனம் கவனிக்கப்பட்டது.

திருமணம் முடிந்த கையேடு நெப்போலியன் மகன் தனுஷ் மனைவியோடு எங்கு அவுட்டிங் போயிருக்காரு பாருங்க!

36
Vidya Pradeep Viral Photos

இந்த படத்திற்கு பின்னர் இவர் ஹீரோயினாக நடித்த திரைப்படம் விருந்தாளி. இதில் ஹீரோவாக மைக்கில் ஈஸ்வர் என்பவர் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே... ஹீரோவான மைக்கிளை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் தன்னுடைய 18 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார் வித்யா.

மைக்கில் சில படங்கள் மட்டுமே நடித்த நிலையில், தற்போது புகைப்பட கலைஞராக இருந்து வருகிறார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய காதல் மனைவிக்கு உறுதுணையாக இருந்து, அவரை பயோ டெக்னாலஜி முதுகலை பட்டம் வரை படிக்க வைத்ததோடு, ஒரு நடிகையாக இருப்பதற்கும் சுதந்திரம் கொடுத்தார்.

46
Vidya Pradeep with Husband

இந்நிலையில், இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வித்யா பிரதீப் நடித்த 'சைவம்' திரைப்படம் தான் இவரது திரையுலக வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா அமலாபால் நடிப்பில் வெளியான பசங்க 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை 35 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள வித்யா பிரதீப், சன் டிவியில் ஒளிபரப்பான 'நாயகி'  சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதையும் கொள்ளை கொண்டார். மூன்று ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த சீரியல் வித்யா பிரதீப்புக்கு, மிகப்பெரிய ரீச்சை பெற்று தந்தது.

'கார்த்திகை தீபம் 2' சீரியலில் இருந்து திட்டம் போட்டு நீக்கிவிட்டனர்! ஹீரோயின் அர்த்திகா பகீர் குற்றச்சாட்டு!
 

56
Vidya Pradeep Pregnancy Photos

இவருக்கு திருமணம் ஆன தகவல், பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டின் துவக்கத்தில் தனக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என சமூக வலைதளத்தில் கணவருடன் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வெளிப்படுத்தினார். 

66
Vidya Pradeep Pregnancy

தற்போது வித்யா பிரதீப் திருமணம் ஆகி 13 ஆண்டுகளுக்கு பின்னர், தனக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ள தகவலை அறிவித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வயிற்றுடன்... கணவருடன் ரொமான்டிக்காக இவர் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ், வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தொடர்ந்து இந்த கியூட் ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தேவயானிக்காக கெட்டு போன உணவை சாப்பிட்ட சரத்குமார்? பிரபலம் கூறிய தகவல்!

click me!

Recommended Stories