'கார்த்திகை தீபம் 2' தொடரில் இருந்து, நடிகை ஆர்த்திகா... தன்னை திட்டம் போட்டு சீரியலில் இருந்து நீக்கிவிட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், டிஆர்பி-யில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள 'கார்த்திகை தீபம்' சீரியல், இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில்... இந்த தொடரின் இரண்டாவது சீசனில் இருந்து கதாநாயகி அர்த்திகா நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து, அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
25
Zee Tamil Top Serial Karthigai Deepam
கடந்த சில வருடங்களாகவே... திரைப்படங்களுக்கு நிகரான வரவேற்பை, டிவி தொடர்களும் பெற்று வருகின்றன. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக டி ஆர் பி-யில் பட்டையை கிளப்பி வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆபீஸ்' தொடர் மூலம் சீரியல் நடிகராக அறிமுகமாகி, பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவியவர் நடிகர் கார்த்திக் ராஜ்.
இவர் நடித்த செம்பருத்தி தொடர், நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில்... திரைப்படத்தில் நடிப்பதற்காக பாதியிலேயே இந்த தொடரில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து, தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக, ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வந்த இந்த தொடர் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது.
45
Karthigai Deepam 2
இரண்டாவது சீசன் குறித்து, சமீபத்தில் வெளியானது. இந்த முறை கிராமத்து கதைக்களத்தில் இந்தத் தொடர் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்த தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஹீரோயினாக வைஷ்ணவி கமிட் ஆகியுள்ளார். கார்த்திகை தீபம் தொடரில் ஹீரோயினாக நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை அர்த்திகா இந்த தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள அர்த்திகா, 'கார்த்திகை தீபம் 2' தொடரில் இருந்து என்னை திட்டம் போட்டு நீக்கி உள்ளனர். இதற்கு காரணம் அண்மையில் தான் எனக்கு திருமணம் நடந்து முடிந்தது. இதனால் நெருக்கமான காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது. இதையெல்லாம் மனதில் வைத்து என்னை இந்த சீரியலில் இருந்து நீக்கி உள்ளனர். இதற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும், இதுநாள் வரை எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். எனினும் கூடிய விரைவில் அர்த்திகா புது சீரியலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.