நடிகர் சரத்குமார், அவர் நடித்த படத்தின் படப்பிடிப்பில் தேவயானி ஊட்டிய கெட்டு போன சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு.. வாந்தி எடுத்ததாக பிரபல இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக மாறிய நடிகர்களில் ஒருவர் சரத்குமார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத்குமார், பத்திரிக்கை துறையில் பணியாற்றியவர். அதே போல் இவர் ஒரு பாடி பில்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
25
Sarathkumar Cinema Carrier
1988- ஆம் ஆண்டு 'கண் சிமிட்டும் நேரம்' என்கிற படத்தில் இன்ஸ்பெக்டர் ரோலில் நடித்த சரத்குமார், இந்த படத்தை தயாரித்தும் இருந்தார். பின்னர் புலன் விசாரணை, புது பாடகன், சீதா, சந்தன காற்று போன்ற படங்களில் விஜயகாந்துக்கு வில்லனாக நடித்து மிரட்டினார். ஒரே மாதிரியான கதையை தேர்வு செய்து நடிக்க விரும்பாத சரத்குமார், ஹீரோ வாய்ப்பு தேடிய போது... சேரன் பாண்டியன் திரைப்படம் இவரது திரையுலக வாழக்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து ஹீரோ சப்ஜெட் படங்களில் நடிக்க துவங்கிய சரத்குமார், சூரியன், நட்சத்திர நாயகன், வேடன், தசரதன், ஐ லவ் இந்தியா, கட்டபொம்மன் என தொடர்ந்து ஆக்ஷன் படங்களை தேர்வு செய்து நடித்து மிரட்டினார். 90-களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த சரத்குமார் நடிப்பில், 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சூரிய வம்சம்'. இந்த படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கிய நிலையில், அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார்.
45
Sooriya Vamsam Movie
அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகாவும், மகன் சரத்குமாருக்கு ஜோடியாக... தேவையானியும் நடித்திருந்தனர். இந்த படத்தில் தன்னுடைய தங்கையின் திருமணத்தில் அணைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும், சரத்குமார் கடைசியாக சாப்பிடுவது போல் ஒரு காட்சி இருக்கும். இந்த காட்சியில் தேவயானி, சரத்குமாருக்கு ஊட்டி விடுவது போல் ஒரு சீன் இருக்கும். இந்த காட்சியில் சரத்குமார் நடிப்பதற்காக மதியமே ஸ்பெஷல் மீல்ஸ் வாங்கி வைக்கப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் தான் இந்த காட்சியை இயக்குனர் படமாக்கி உள்ளார்.
சரத்குமாருக்கு தேவயானி கெட்டுப்போன உணவை ஊட்டிய போதிலும், எதுவும் சொல்லாமல் அந்த காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக சாப்பிட்டு முடித்த சரத்குமார். காரணம் ஏற்கனவே இரவு ஆகி விட்டதால், இந்த டேக் ஓகே ஆன பின்னர், வாஷ் பேசினுக்கு சென்று, வாந்தி எடுத்துள்ளார். என்ன ஆனது என விக்ரமன் பதட்டத்துடன் வந்து கேட்ட போது தான் சாப்பாடு கெட்டுப்போன விஷயமே அவருக்கு தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் அவரே கூறி உள்ளார்.