ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான "ரங்கூன்" என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இயக்கிய அமரன் என்கின்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்தார். தமிழகத்தில் பிறந்து வீரம் மிகுந்த ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடந்த சண்டையின் போது மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் இப்போது தனது இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு கேரியர் பெஸ்ட் திரைப்படமாக இது மாதிரி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.