பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும், சௌந்தர்யா நேற்று கதை சொல்லும் டாஸ்கில் தன்னை பற்றியும், தனக்கு நடந்த Scam குறித்தும் முதல் முறையாக பேசியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக இருப்பவர் சௌந்தர்யா நச்சுட்டன். தன் மீது போட்டியாளர்கள் எப்படிப்பட்ட விமர்சனங்களை வாரி இறைத்தாலும் ஐ டோன்ட் கேர் என்பது தன்னுடைய ஸ்டைலில் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். எனவே இவருக்கு மற்ற பெண் போட்டியாளர்களை விட, இந்த சீசனில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். முதல் வாரத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் சௌந்தர்யாவை சேவ் செய்து வருவதால்... மற்ற ஹவுஸ் மேட்ஸ் இவர் என்ன செஞ்சிட்டாருனு மக்கள் இவரை சேவ் செய்கிறார்கள் என புலம்பி வருகின்றனர்.
24
Soundariya Nanjundan in bigg boss
இந்நிலையில், இந்த வாரம் கதை சொல்லும் டாஸ்க் போட்டியாளர்கள் மத்தியில் நடந்த நிலையில்... அதில் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதை உள்ளிட்ட சில விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
நேற்றைய தினம், சௌந்தர்யா தன்னை பற்றி கூறினார். எடுத்ததுமே தன்னுடைய குரலை வைத்து பலர் என்னை அசிங்கப்படுத்தி உள்ளனர். சினிமாவிற்கு வரவேண்டும் என்கிற ஆசை எனக்குள் இருந்த போது... எனக்கு முழுக்க முழுக்க சப்போர்ட் செய்தது, என்னுடைய பெற்றோர் தான். குறிப்பாக என்னுடைய அப்பா எனக்கு பல விஷயங்களில் உறுதுணையாக இருந்தார்.
44
Soundarya lost 17 lakhs
நான் எப்படியோ கஷ்டப்பட்டு, முட்டி மோதி கடந்த 8 வருடமாக சினிமாவில் சம்பாதித்த 17 லட்சத்தை செலவு செய்யாமல் சேர்த்து வைத்திருந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சில வாரங்களே இருந்த நிலையில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. 2 நிமிடத்தில்... என்னுடைய அக்கவுண்டில் இருந்த 17 லட்சமும் போய் விட்டது. இதை என் பெற்றோரிடம் கூட என்னால் சொல்ல முடியவில்லை. இந்த நிகழ்ச்சி மூலம் தான் இந்த தகவல் எங்க அப்பாவுக்கு கூட தெரியவரும். பிக்பாஸ் வீட்டின் வரும் போது எங்க அப்பா கிட்ட கடன் வாங்கி தான் வந்தேன் என கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.