மலையாள சினிமாவை தாண்டி இப்பொது தமிழ் சினிமாவிலும் தனது தடத்தை ஆழப்பதிந்து வருகின்றார் நடிகர் பகத் பாசில். அவருடைய நடிப்பில் வெளியான பல தமிழ் திரைப்படங்கள் இப்பொது மெகாஹிட்டாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டு மாமன்னன் படத்திற்கு முன்பு பகத் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வெளியான மலையாள படம் தான் "தூமம்". நல்ல எதிர்பார்ப்பு இருந்தபோது இந்த படம் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை.
ஆனால் அதன் பிறகு வெளியான மாமன்னன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல, மீண்டும் அவர் மலையாள மொழியில் நடித்து அசத்தி கம் பேக் கொடுத்த படம் தான் "ஆவேசம்". அதுவும் இந்திய அளவில் பகத்தின் நடிப்பு இந்த படத்திற்காக பெரிய அளவில் பாராட்டப்பட்டது.