தமிழில் "ரோஜா" திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டான உடனே, மலையாள மற்றும் தெலுங்கு மொழியிலும் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க தொடங்கினார். மலையாளத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான நடிகர் மோகன் லாலின் Yoddha என்கின்ற திரைப்படத்திற்கு இசையமைத்தது ரகுமான் தான். தொடர்ச்சியாக "புதிய முகம்", "ஜென்டில் மேன்", "கிழக்குச் சீமையிலே", "உழவன்", "திருடா திருடா", "வண்டிச்சோலை சின்னராசு", "டூயட்", "மே மாதம்", "காதலன்", "பவித்ரா", "கருத்தம்மா" மற்றும் "புதிய மன்னர்கள்" என்று ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது.
ரகுமான் அறிமுகமான 1992 ஆம் ஆண்டு அவருடைய இசையில் இரண்டு திரைப்படங்கள் வெளியான நிலையில், 1994 ஆம் ஆண்டு அதாவது ரகுமான் சினிமா உலகிற்கு 2வது ஆண்டில் அவருடைய இசையில் 9 திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.