பல கோடியில் பட்ஜெட்; டாப் நடிகர்கள் நடித்தும் செலவில் பாதி கூட வசூல் செய்யாத டாப் 4 தமிழ் படங்கள்!

Tamil Movies : கடந்த சில ஆண்டுகளில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, மட்டுமல்லாமல் மிகப் பெரிய பொருட் செலவில் எடுத்த ஒரு சில திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாத நிலை கூட ஏற்பட்டிருக்கிறது.

kollywood movies

அந்த வகையில் பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி உலக அளவில் வெளியான திரைப்படம் தான் ஜப்பான். இயக்குனர் ராஜு முருகன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். சுனில், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். மறைந்த தாதா ஒருவருடைய கதையை தழுவி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

வெளியீட்டுக்கு முன்பாக இந்த திரைப்படம் மிக மிக பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் வெறும் 26 கோடிகளை மட்டுமே வசூல் செய்து பிளாப் திரைப்படமாக மாறியது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். அதே 2023 ஆம் ஆண்டில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான பல திரைப்படங்கள் மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் - லோவன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது!

Thangalaan

பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் "தங்கலான்". இந்த திரைப்படத்திற்காக மிக மிக பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்தது. பெரிய பட்ஜெட் மட்டும் அல்லாமல் பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் தங்களுடைய நடிப்பை சிறந்த வகையில் வெளிப்படுத்தினர். நிச்சயம் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடியும் திரைப்படம் 80 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Lal Salaam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட் ஆன நிலையில், அதைத்தொடர்ந்து அவர் ஒரு "எக்ஸ்டெண்டெட் கேமியோவில் நடித்து வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்திற்காக பெரிய அளவில் பிரமோஷன் பணிகள் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த திரைப்படம் பற்றி சில சர்ச்சைகளையும் (ஹார்ட் டிஸ்க்) அப்போது கிளப்பியது யாராலும் மறக்கமுடியாது. ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்றாலும், நடிகர் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் மிக நேர்த்தியாக தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். 

பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தும், இந்த திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த 2024 ஆம் ஆண்டில் பெரிய அளவில் தோல்வியை சந்தித்த திரைப்படத்தில் ஒன்றாக மாறியது லால் சலாம்.  
 

Indian 2

அதேபோல இந்த ஆண்டு மிக மிக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக மாறியது இந்தியன் 2. சுமார் ஐந்து வருட கால போராட்டத்திற்கு பிறகு இந்தியன் திரைப்படத்தை இந்த ஆண்டு இயக்குனர் சங்கர் வெளியிட்டார். கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவைவிட 50 சதவீதத்திற்கும் குறைவான வசூலை மட்டுமே பெற்று மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக மாறியது. இந்த திரைப்படத்தோடு நேருக்கு நேர் மோதியது பார்த்திபனின் டீன்ஸ் என்ற திரைப்படம். உண்மையில் எதிர்பார்த்ததை விட அந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 

காதலுக்காக சினிமாவை உதறிவிட்டு... 16 வயது மூத்த பிளே பாய் நடிகரை திருமணம் செய்த இந்த குழந்தை யார் தெரியுமா?

Latest Videos

click me!