கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் - லோவன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது!

First Published | Nov 8, 2024, 4:20 PM IST

நடிகை ரம்யா பாண்டியன் திருமணம், இன்று காலை ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் மிகப் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் அருண் பாண்டியன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர் இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

Ramya Pandian

திறமை இருந்தும், திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி கொண்டிருக்கும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவரவில்லை என்றாலும், தன்னுடைய இடையழகை... காட்டியபடி, எடுத்த மொட்டை மாடி போட்டோ ஷூட் ஒரே நாளில், பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலமடைய செய்தது.

Ramya Pandian Marriage

ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், இதை தொடர்ந்து வெளியான படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து, தோல்வியை சந்தித்தது. எனவே அதிரடியாக சின்னத்திரையில், களமிறங்கிய ரம்யா பாண்டியன் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார். டைட்டிலை தவற விட்டாலும் ஃபைனலிஸ்ட்டில் ஒருவராக வந்தார்.

காதலுக்காக சினிமாவை உதறிவிட்டு... 16 வயது மூத்த பிளே பாய் நடிகரை திருமணம் செய்த இந்த குழந்தை யார் தெரியுமா?

Tap to resize

Ramya Pandian and Lovan Marriage

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஃபைனல் வரை வந்த ரம்யா பாண்டியன்... இந்த நிகழ்ச்சியிலும் டைட்டிலை தவற விட்டார். தற்போது மாடலிங் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ரம்யா, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய குடும்பத்துடன் கோவில்களுக்கு செல்வது, வெளியூருக்கு வெகேஷன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

Arun Pandian Family

சமீப காலமாக, ரம்யா பாண்டியன் யோகாவில் அதிக ஆர்வம் காட்டி வந்த நிலையில், ரிஷிகேஷ் சென்ற போது, அங்குள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்று வந்தார். யோகா ஆசிரியருக்கான பயிற்சி பெற்று அதில் தகுதி பெற்று பின்னர் இவருக்கு யோகா ஆசிரியர் என்பதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. 

சன் டிவி வாய்ப்புக்காக... விஜய் டிவியில் சீரியலை உதறி தள்ளிய நடிகை!

RAmya Pandian Family

நடிகை ரம்யா பாண்டியனுக்கு யோகா பயிற்சி கொடுத்தவர் தான் லோவன் தவான். ரம்யாவுக்கு - லோவனுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிய நிலையில், இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் கூறி, பச்சை கொடி காட்டினர். இந்நிலையில், மாப்பிள்ளை லோவன் விருப்பப்படி இவர்கள் இருவருக்கும், இன்று காலை இன்று காலை ரிஷிகேஷ், சிவபுரி கங்கைக்கரையில் திருமணம்  சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 

Ramya Pandian wedding Photos

திருமணம் எளிமையான முறையில் நடந்துள்ளதால், ரம்யாவின் சித்தப்பா அருண்பாண்டியன், அம்மா சாந்தி துரைப்பாண்டி மற்றும் தாய் மாமா கணேஷ்குமார் மற்றும் உறவினர்கள்... மற்றும் மணமகன் வீட்டார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெப்போலியன் மகன் திருமணத்தில் பரிமாறப்பட்ட 70 வகையான இந்திய உணவுகள்! 4 மாதமாக நடந்த ஏற்பாடு!

Latest Videos

click me!