இவர் தமிழில், 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'கஜினி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறு கதாபாத்தியதில் நடித்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். தமிழில் தான் தொடர்ந்து 6 படங்கள் நடித்தார்.
சாயிஷாவின் நடன திறமையை பார்த்து வியர்ந்து, இவரை தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தான், தான் இயக்கிய 'வனமகன்' திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜூங்கா போன்ற படங்களில் நடித்தார்.