மகாநதி சீரியலில் இருந்து, பிரபல நடிகை திடீரென விலகி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் விலகிய நடிகைக்கு பதிலாக நடிக்க உள்ள நடிகை யார் என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'மகாநதி' தொடரில் இருந்து, இரண்டாவது நாயகி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கண்மணி மனோகரன் அதிரடியாக வெளியேறியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
25
Swaminathan Lover Vennila Character
இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல தொடர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான 'பாரதி கண்ணம்மா' தொடரில், அஞ்சலி என்கிற வில்லி வேடத்தில் நடித்து... பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த சீரியலில் இவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைய துவங்கிய பின்னர், அதிரடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'அமுதாவும் அன்ன லட்சுமியும்' என்கிற சீரியலில் சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் விஜய் டிவி பக்கம் சாய்ந்த கண்மணி... 'மகாநதி' சீரியலில் ஹீரோவாக நடித்து வரும், சுவாமி நாதனின் முன்னாள் காதலி, 'வெண்ணிலா' வேடத்தில் நடிக்க கமிட் ஆனார். தற்போது வரை வெண்ணிலா கதாபாத்திரம் குறித்த தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இனி எபிசோடுகளில் வெண்ணிலாவுக்கு என்ன நடந்தது? என்கிற தகவல் தெரியவரும் என தெரிகிறது.
45
Sun TV Rahavi Serial
மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ராகவி என்கிற தொடரில், ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில்... விஜய் டிவி தொடரில் இருந்து அதிரடியாக வெளியேறியுள்ளார். கண்மணி மகாநதி சீரியலில் இருந்து விலகி விட்டதால், இவருக்கு பதிலாக... முத்தழகு சீரியலில் நடித்து வந்த வைஷாலி தனிகா வெண்ணிலா ரோலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்மணி மனோகரன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பிரபல தொகுப்பாளர் அஸ்வந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார்.