
Lubber Pandhu Most Profitable Tamil Movie of 2024: சினிமாவில் வெற்றி தோல்விகலை எப்போதும் கணிக்க முடியாது. அதிக பட்ஜெட்டில் ப்ரீ ரிலிஸ் முன்னாடி அதிக பப்ளிசிட்டியுடன் வெளிவரும், கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் படங்கள் கூட பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்விய படங்கள் ஏராளம். அதே நேரத்தில் எந்த ஆரவாரமும் இல்லமால், எந்தவித விளம்பரமும் இல்லாமல், சைலண்டாக திரைக்கு வந்து மவுத் பப்ளிசிட்டியால் வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்திய படங்களும் ஏராளம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் சைலண்டாக திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் இருக்கிறது என்றால் அது லப்பர் பந்து படம் தான்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவதர்ஷினி, டிஎஸ்கே என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வந்த படம் லப்பர் பந்து. முழுக்க முழுக்க கிரிக்கெட் கதையை மையப்படுத்திய இந்தப் படம் குறைவான திரையரங்களில் வெளியானது.
முதல் நாளில் மட்டும் இந்தப் படம் ரூ.75 லட்சம் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளில் ரூ.1.5 கோடியாக உயர்ந்தது. இதே போன்று 3ஆவது நாளில் ரூ.2 கோடி அதிகரித்தது. இந்தப் படம் திரைக்கு வந்து இன்றுடன் 50 நாட்கள் ஆன நிலையில் இன்னும் சில திரையங்களில் ஒரு சில காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. திரையரங்கைத் தாண்டி ஓடிடியில் இந்தப் படம் வெளியானது. அப்படியிருந்தும் திரையரங்குகளில் ஓடுவது என்பது அந்தப் படம் குவித்த சாதனை தான்.
ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.42.50 கோடி வரையில் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் இதைவிட அதிக வசூல் செய்த படங்கள் இந்த ஆண்டு பத்துக்கும் மேல் இருந்தாலும், தயாரிப்பாளருக்கு அதிக லாபம் ஈட்டித் தந்த படம் வேறு எதுவும் இல்லை. இதன் மூலமாக இந்த 2024ஆம் ஆண்டில் அதிக லாபத்தை ஈட்டி தந்த படங்களில் பட்டியலில் லப்பர் பந்து முதலிடம் பிடித்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டியும், நினைவுப் பரிசு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த டீம் மீண்டும் இணைய இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்தப் படத்திற்கு பிறகு அமரன் மற்றும் கோட் படங்கள் இடம் பிடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. முழுக்க முழுக்க முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தியப் படம் இராணுவ கதையை அடிப்படையாக கொண்டு வெளியானது. அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதையில் நடித்திருந்தார்.
இராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம் இது. நேர்மறையான விமர்சனத்தை பெற்ற அமரன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரையில் எதிர்மறையான விமர்சனத்தை பெறாத படங்களில் பட்டியலில் அமரன் முதலிடம் பிடித்திருக்கிறது. ஆனால், அமரன் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும் புரமோஷன், இசை வெளியீட்டு விழா என்று அதிக பப்சிட்டியோடு தான் படம் வெளியானது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.170 கோடி வரையில் வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த படங்களில் அமரன் படமும் ஒன்று. எப்படியும் இந்தப் படம் ஆஸ்கர் அல்லது தேசிய விருது பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.