அசுரன் உடன் இணைந்த அமரன்! சைலண்டாக நடந்து முடிந்த D55 படத்தின் பூஜை

Published : Nov 08, 2024, 01:09 PM IST

சிவகார்த்திகேயனை வைத்து அமரன் என்கிற மாஸ் ஹிட் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

PREV
14
அசுரன் உடன் இணைந்த அமரன்! சைலண்டாக நடந்து முடிந்த D55 படத்தின் பூஜை
D55 Movie Pooja Stills

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக துப்பாக்கி படத்தில் பணியாற்றிய ராஜ்குமார் பெரியசாமி. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கெளதம் கார்த்திக்கின் ரங்கூன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதுதவிர கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சில சீசன்களையும் ராஜ்குமார் பெரியசாமி தான் டைரக்ட் பண்ணினார். பின்னர் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்த ராஜ்குமார் பெரியசாமி அவரை வைத்து அமரன் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

24
D55 Movie Pooja Stills

மறைந்த முன்னாள் இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து அமரன் படத்தை இயக்கி இருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. அப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். அமரன் திரைப்படம் கடந்த மாதம் 31-ந் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் ஒரு வாரத்தில் உலகளவில் ரூ.160 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... அடங்காத அசுரன் தனுஷின் ராயன் பட லைஃப் டைம் வசூலை 6 நாட்களில் அடிச்சு தூக்கிய அமரன்!

34
D55 Movie Pooja Stills

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்த படம் யாருடன் பண்ண உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இதுகுறித்து அண்மையில் அவர் அளித்த பேட்டியில் நேரடியாகவே கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு ஒப்பனாக பதிலளிக்காமல், பவர்ஃபுல் நடிகருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஹிண்ட் கொடுத்திருந்தார். அப்போதே டீகோட் செய்ய தொடங்கிய ரசிகர்கள் அந்த பவர்ஃபுல் நடிகர் தனுஷ் தான் என கூறி வந்தனர்.

44
D55 Movie Pooja Stills

இந்த நிலையில், தற்போது சைலண்டாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்தபட பூஜை நடைபெற்று இருக்கிறது. அந்த பூஜையில் அப்படத்தின் நாயகன் தனுஷ், அப்படத்தின் தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் நிறுவனர் அன்புச்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது தற்காலிகமாக டி55 என அப்படத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அமரன் படத்திற்கு முன்பே, தன் படத்தில் முகுந்தனுக்கு மரியாதை செலுத்திய கோலிவுட் நடிகர் - யார் அவர்?

Read more Photos on
click me!

Recommended Stories