
தமிழ் சினிமாவில் 80பது மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். தன்னுடைய மாமா திமுகவில் இருந்ததால், அரசியலிலும் இறங்கி வெற்றி கண்ட இவர், தன்னுடைய மகன்களான தனுஷ் மற்றும் குணால் இருவரும் அப்பா தங்களோடு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதால், முழுவதுமாக அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி மனைவி மற்றும் தன்னுடைய மகன்களோடு அமெரிக்காவில் குடி ஏறினார்.
தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் கொண்டு, அமெரிக்காவில் மிகப்பெரிய பார்ம் ஹவுஸ் ஒன்றை உருவாக்கி உள்ள நெப்போலியன் அதில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதே போல் இவர் நடத்தி வரும் ஐடி நிறுவனம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக உள்ளது. நெப்போலியன் நடத்தும் ஐடி நிறுவனத்தில், திரையுலகில் லைட் மேன், மேக் கப் மேன் என அடைப்படை வேலைகள் செய்து வருபவர்களின் பிள்ளைகள் பலர் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தை நெப்போலியனின் மகன்களான தனுஷ் மற்றும் குணால் தான் கவனித்து வருகின்றனர்.
தனுஷ் - அக்ஷயா திருமணத்தில்.. தன் கல்யாண ஆசையை வெளிப்படுத்திய நெப்போலியனின் 2-ஆவது மகன் குணால்!
நெப்போலியன் திருச்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அமெரிக்காவில் செட்டில் ஆக முக்கிய காரணம் இவருடைய மகன் தனுஷ் தான். இவர் சிறு வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 10 வயதை எட்டிய போது முழுவதுமாக நடக்க முடியாமல் போனது. முதலில் சித்தமருவ மருத்துவத்தை நாடிய நெப்போலியன், அதில் ஓரளவு பலன் கிடைத்தாலும்... தன்னுடைய மகனின் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் நிலை ஏற்பட்டது. பின்னர் மகனுடைய வசதிக்காக அங்கேயே வீடு ஒன்றை வாங்கி செட்டில் ஆனார்.
தன்னுடைய இரண்டு பிள்ளைகள் மீதும், அளவுக்கு அதிகமான பாசம் வைத்துள்ள நெப்போலியன்... மகன்கள் என்ன கேட்டாலும் அதை உடனே செய்து விடுவார். மகன்களுக்கு பிடித்த மாதிரி வீட்டை மாற்றி அமைத்துள்ள நெப்போலியன், தனுசுக்காக பிரத்தியேகமாக நீச்சல் தொட்டி, லிஃப்ட் போன்ற வசதியுடன் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். மேலும் நெப்போலியனின் மகன் தனுஷ் கடந்த பத்து வருடங்களாக ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி வந்த நிலையில், அவரால் விமானத்தில் செல்ல முடியாது என்பதால், கப்பல் மூலம் ஜப்பானுக்கு செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டனர்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்களின் ஒருவர் தான்? தர்ஷா குப்தா பகிர்ந்த தகவல்!
அந்த சமயத்தில் தான் தனுஷுக்கு திருமணம் கைகூடி வந்தது. ஜப்பான் செல்லும் முடிவை விடலாம் என நினைத்த போது தான், தனுஷ்... நாம் ஜப்பானுக்கு சென்று அங்கேயே அக்ஷயாவை வரவைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என சொன்னார். பின்னர் அதற்கான டீடைல் பிளான் போட்டு, ஒருவழியாக நேற்று அக்ஷயா - தனுஷ் திருமணம் ஜப்பானின் தமிழர் கலாச்சாரப்படி நடந்து முடிந்துள்ளது.
தனுஷ் - அக்ஷயா திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த நிலையில், இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர். இவர்களின் திருமண புகைப்படங்களும், சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஜப்பான் என்றாலே, இந்திய உணவுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் நெப்போலியன் கடந்த 4 மாதமாக திட்டமிட்டு, தன்னுடைய மகன் கல்யாண விருந்தில்... 70 வகையான இந்திய உணவுகளை விருந்தாக கொடுத்து அசர வைத்துள்ளார். தல வாழலை கல்யாண விருந்தில், சாதம், சாம்பார், வடை, பாயாசம், துவங்கி.. விதவிதமான பொரியல், கூட்டு, அவியல், தக்காளி ரசம் என பக்காவான தமிழக உணவுகள் ஏராளம் இருந்துள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
70 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் உலக நாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?