பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்? கண்ணீரோடு வெளியேறப்போகும் அந்த 2 பேர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் இதுவரை கம்மியான ஓட்டுக்கள் வாங்கிய போட்டியாளர்கள் பற்றி பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை நடந்து முடிந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த சீசனை முதன்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனில் இதுவரை ரவீந்தர் சந்திரசேகர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் ஆகி உள்ளனர்.

Bigg Boss Tamil season 8 contestants

இதையடுத்து கடந்த வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்டாக நோ எலிமினேஷன் என அறிவித்த விஜய் சேதுபதி, தீபாவளி போனஸாக 6 வைல்டு கார்டு போட்டியாளர்களையும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். அதன்படி ஷிவகுமார், ராணவ், ரயான், மஞ்சரி, ரியா, வர்ஷினி வெங்கட் ஆகிய ஆறு பேர் வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அவர்களின் வரவால் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஆறாத ரணமாக உள்ள முதல் காதலியின் இறப்பு; 5 முறை தற்கொலைக்கு முயன்றேன் - பகீர் கிளப்பிய பிக் பாஸ் சத்யா


Bigg Boss Wild Card Contestants

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெறும், அதில் ஒவ்வொரு போட்டியாளரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற நினைக்கும் இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்யலாம். அந்த வகையில் இந்த வாரம் முதன்முறையாக ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் தவிர்த்து எஞ்சியுள்ள போட்டியாளர்களை நாமினேட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

Bigg Boss Elimination

அதையடுத்து ஓப்பன் நாமினேஷனை தொடங்கிய போட்டியாளர்கள், தங்கள் மனதில் இருக்கும் இரண்டு நபர்களை அவர்கள் முகத்துக்கு நேராகவே நாமினேட் செய்தனர். அதில் அருண் பிரசாத், விஷால், சாச்சனா, தீபக், ரஞ்சித், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, முத்துக்குமரன் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் ரஞ்சித் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்றதால் அவர் இந்த வார எவிக்‌ஷனில் இருந்து தப்பித்துவிட்டார்.

Bigg Boss This Week Elimination

எஞ்சியுள்ள 11 பேரில் முத்துக்குமரன், விஷால், ஜாக்குலின் ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று முதல் மூன்று இடத்தில் உள்ளனர். அடுத்தபடியாக தீபக், அருண், அன்ஷிதா, பவித்ரா ஆகியோர் உள்ளனர். இதில் கடைசி மூன்று இடத்தில் இருப்பது சாச்சனா, சுனிதா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி. கடந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்படாததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் ஆர்.ஜே.ஆனந்தி கன்பார்ம் வெளியேறிவிடுவார். எஞ்சியுள்ள சாச்சனா மற்றும் சுனிதா ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேட் ஆகலாம் என யூகிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... காரில் அடிக்க வந்தனர்; அசிங்கப்படுத்திய காதலன்! பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் பகிர்ந்த கண்ணீர் கதை!

Latest Videos

click me!