500 கோடிக்கு மேல் சொத்து; ராஜா ராணி போல் ஜம்முனு வாழும் கோலிவுட்டின் பணக்கார ஜோடி யார் தெரியுமா?

First Published | Nov 8, 2024, 8:52 AM IST

கோலிவுட்டில் காதல் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகள் ஏராளம், அந்த வரிசையில் 500 கோடி சொத்துக்களுடன் பணக்கார ஜோடியாக வலம் வரும் இருவர் பற்றி பார்க்கலாம்.

Kollywood Richest Couple

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளுக்கு பஞ்சமில்லை. சினிமாவில் தன்னுடன் நடித்த நடிகைகளையே காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் ஏராளம். அந்த வரிசையில் சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி, விக்னேஷ் சிவன் - நயன்தாரா போன்ற பிரபலங்கள் திருமணத்துக்கு பின்னரும் தீரா காதலுடன் உள்ளனர். இந்த காதல் அவர்களை வாழ்க்கையில் அடுத்தடுத்த உயரங்களுக்கும் கொண்டு செல்கிறது. இந்த நிலையில், கோலிவுட்டின் பணக்கார ஜோடி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Suriya Jyothika

அதன்படி தமிழ் சினிமாவில் அதிக சொத்து மதிப்பை கொண்ட பணக்கார ஜோடி என்றால் அது சூர்யா - ஜோதிகா தான். இவர்கள் இருவரும் முதன்முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதிலிருந்த நண்பர்களாக பழகி வந்த சூர்யா - ஜோதிகாவுக்கு காக்க காக்க படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்தது. அப்படம் ஹிட்டானதை போல் அவர்களின் காதலும் வெற்றியடைந்தது. இருப்பினும் குடும்பத்தினர் சம்மதத்திற்காக சில ஆண்டுகள் இருவருமே காத்திருந்தனர்.

Tap to resize

Suriya wife Jyothika

இறுதியாக சூர்யா குடும்பத்தில் ஜோதிகா உடனான திருமணத்துக்கு கிரீன் சிக்னல் கிடைத்ததை அடுத்து, கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை கரம்பிடித்தார் சூர்யா. கெரியரின் உச்சத்தில் இருக்கும் போது சூர்யவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, அதன்பின்னர் சினிமாவை விட்டு விலகிவிட்டார். திருமணத்துக்கு பின் சூர்யா - ஜோதிகா ஜோடிக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகள் வளர்ந்த பின்னர் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.

இதையும் படியுங்கள்... காஸ்ட்லி மிஸ்; கைநழுவிப்போன ராஜமவுலி பட வாய்ப்பு; ஃபீல் பண்ணிய சூர்யா

Suriya Net Worth

அதற்கு முன்னர் வரை கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ஜோதிகா, தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இருந்தார். இதன்காரணமாகவே விஜய்யுடன் நடிக்க வந்த இரண்டு வாய்ப்புகளை மறுத்துவிட்டார். ஒன்று அட்லீ இயக்கத்தில் மெர்சல் படம், மற்றொன்று வெங்கட் பிரபு இயக்கிய கோட் படம். இந்த இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஹிட் அடித்தன.

Jyothika Net Worth

அதற்கு மாறாக காதல் தி கோர், பொன்மகள் வந்தாள் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்தார் ஜோதிகா. இந்தப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. மறுபுறம் நடிகர் சூர்யாவும் அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Suriya Jyothika Combined Net Worth

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி 2டி என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் தரமான படங்களையும் தன் காதல் கணவர் சூர்யா உடன் சேர்ந்து தயாரித்து வருகிறார் ஜோதிகா. அண்மையில் இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் 25 சதவீதம் லாபத்தை கொடுத்ததாக நடிகர் சூர்யாவே கூறி இருந்தார்.

Combined Net Worth of Suriya Jyothika

இப்படி சினிமா மற்றும் பிசினஸ் இரண்டிலும் கொடிகட்டிப் பறக்கும் சூர்யா - ஜோதிகா தான் கோலிவுட்டின் பணக்கார ஜோடியாகவும் திகழ்ந்து வருகின்றனர். அவர்கள் இருவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.537 கோடியாகும். இதில் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு வெறும் 206 கோடி தான், ஆனால் ஜோதிகா ரூ.331 கோடிக்கு சொந்தக்காரியாக இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... 'ஜெய்பீம்' படத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு? முதியவர் செயலால் கலங்கி நின்ற சூர்யா!

Latest Videos

click me!