காஸ்ட்லி மிஸ்; கைநழுவிப்போன ராஜமவுலி பட வாய்ப்பு; ஃபீல் பண்ணிய சூர்யா

Published : Nov 08, 2024, 07:43 AM IST

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டதாக நடிகர் சூர்யா, கங்குவா பட புரமோஷனில் மனம்விட்டு கூறி இருக்கிறார்.

PREV
14
காஸ்ட்லி மிஸ்; கைநழுவிப்போன ராஜமவுலி பட வாய்ப்பு; ஃபீல் பண்ணிய சூர்யா
suriya, Rajamouli

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா, தற்போது கங்குவா என்கிற பிரம்மாண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தீஷா பதானியும், வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார்.

24
Suriyas Kanguva

கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர் 14ந் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். கங்குவா படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற அப்படத்தின் தெலுங்கு புரமோஷனில் இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... "மன்னிப்பு"; சூர்யாவின் கங்குவா திரைப்படம் - வெளியான சிறப்பான அடுத்த அப்டேட் இதோ!

34
Suriya

அப்போது மேடையில் பேசிய சூர்யா, நான் அந்த டிரெயினை மிஸ் பண்ணிவிட்டேன். ஆனால் இன்னும் அதே ரயில் நிலையத்தில் தான் நின்று கொண்டு இருக்கிறேன். கண்டிப்பாக ஒரு நாள் அந்த ரயிலை பிடித்துவிடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என ராஜமவுலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டது பற்றி பேசி இருந்தார் சூர்யா. ராஜாமவுலி இயக்கத்தில் வெளியான மகதீரா திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது சூர்யா தான். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

44
Rajamouli

பின்னர் வந்து பேசிய இயக்குனர் ராஜமவுலி, தான் பான் இந்தியா படங்கள் எடுப்பதற்கு ஊந்துகோளாக இருப்பது சூர்யா என சிலாகித்து பேசியதோடு மட்டுமின்றி, மகதீரா பட வாய்ப்பை நீங்கள் மிஸ் பண்ணவில்லை. நான் தான் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன் என்று கூறியது நடிகர் சூர்யா உற்சாகத்தில் பூரித்துப் போனார். இதையடுத்து கங்குவா படக்குழுவுக்கும் ராஜமவுலி தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... கங்குவா செம ஹிட்; உலக அளவில் உள்ள விநியோகஸ்தர்களை வைத்து வெற்றி விழா நடக்கும் - ஞானவேல் உறுதி!

Read more Photos on
click me!

Recommended Stories