
தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடம், என தனக்கு பொருந்தக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர் நெப்போலியன். நடிப்பை தவிர அரசியல்வாதியாகவும் மக்கள் பணி ஆற்றிய இவர், தன்னுடைய பிள்ளைகளுக்காக நடிப்பு, அரசியல் என அனைத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார்.
இந்நிலையில் நடிகர் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கும், திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்கிற பெண்ணுக்கும் ஜப்பானில் இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமணத்தில் நடிகை மீனா, குஷ்பூ, கலா மாஸ்டர், ராதிகா, போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் மற்றும் உறவினர்களுக்கு மூன்று நாள் ஜப்பான் நாட்டை சுற்றி காட்டவும் ஏற்பாடுகள் செய்திருந்தார். அதே போல் அவர்கள் விரும்பும் தென்னிந்திய உணவுகளான உப்புமா, இட்லி, தோசை, வடை, பொங்கல் என ஜப்பானில் கிடைக்காத விதவிதமான தென்னிந்திய உணவுகளை ஏற்பாடு செய்து ஆச்சரியப்படுத்தினார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்களின் ஒருவர் தான்? தர்ஷா குப்தா பகிர்ந்த தகவல்!
தனுஷ் - அக்ஷயா திருமண சடங்குகள் தமிழர்களின் கலாச்சாரப்படி பந்தக்கால் நட்டு துவங்கப்பட்டது. மேலும் ஹல்தி, மெஹந்தி, நலங்கு, போன்ற பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இதை பார்த்து ஜப்பானில் உள்ள பலர் வியந்து பாராட்டியதாக கூறப்படுகிறது.
நடன இயக்குனர் கலா மாஸ்டர் தான், நெப்போலியனின் மகன் தனுஷின் ஹெல்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். மேலும் டான்ஸ் நிகழ்ச்சிகளையும் இவர் ஏற்பாடு செய்து மண மகளையும் டான்ஸ் ஆட வைத்தது ஹை லைட் என கூறப்படுகிறது.
கலா மாஸ்டர் நெப்போலியன் குடும்பத்தினரிடம் பேசும்போது, அவர்கள் திருமணம் குறித்து பல விஷயங்களை இவரிடம் பகிர்ந்து கொண்டனர். ஜப்பானில் திருமணம் நடைபெற காரணம் என்ன என கேட்டபோது, தனுஷுக்கு மிகவும் பிடித்த இடம் ஜப்பான். அவர் பலமுறை ஜப்பானுக்கு தன்னை அழைத்துச் செல்லும்படி கேட்டார். அப்போது நாங்கள் பெரிதாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் ஜப்பானுக்கு செல்ல திட்டமிட்டோம், அப்போதுதான் தனுஷின் திருமணமும் கைக்கூடி வந்தது. தனுஷ் இடம் இப்போது இந்த பிளானை கைவிடலாம் என கூறியதற்கு, அவர்தான் நாம் ஜப்பான் சென்று அக்ஷயாவையும் அங்கு வரவைத்து திருமணத்தை நடத்திவிடலாம் என கூறினார். இதன் பின்னரே இதற்கான ஏற்பாடுகளில் நடைபெற்றது. என நெப்போலியன் மனைவி சுதா தெரிவித்தார்.
70 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் உலக நாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மணமகன் தனுஷிடம் அக்ஷயாவிடம் பிடித்தது என்ன எனக் கேட்டபோது, அவர் நன்றாக பேசுவார் என கூறினார் அக்ஷயா. அக்ஷயாவும் கிட்டதட்ட தனுஷை பற்றி கேட்டபோது அதே பதிலை தான் கூறினார். தனுஷின் தம்பி குணாலிடம் உங்களுடைய அண்ணி பற்றி சொல்லுங்கள் என கலா மாஸ்டர் கேட்டபோது, அவர் மிகவும் எளிதாக அனைவரிடமும் பழகுகிறார் என கூறினார்.
சரி அண்ணனுக்கு ஜப்பானில் திருமணம் நடக்க போகிறது, உங்களுடைய திருமணத்தை எந்த ஊரில் நடத்த ஆசை என குணாலிடம் கலா மாஸ்டர் கேட்க... அவர் நிலாவில் நடக்கும் என நம்புவதாக கூறினார். இதை கேட்டதும் அவரே ஒரு நிமிடம் ஷாக் ஆகி, நெப்போலியன் மனைவியை பார்த்து... உங்களுடைய சொத்தை அழிக்காமல் விடமாட்டாங்க போல என கூறி சிரித்தார். பின்னர் தன்னுடைய தம்பிக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில், தனுஷ் எதிர்காலத்தில் தன்னுடைய தம்பிக்கு நிலவில் திருமணம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என கூறினார்.
ஆரம்பத்தில் தன்னுடைய ஹல்தி நிகழ்ச்சியில் நடனமாட அக்ஷயா மறுத்த போதிலும், தனுஷ் கூறியதால் ஒப்புக்கொண்டார். இதன் மூலம் உங்கள் இருவருக்கும் இடையே நன்கு புரிதல் இருக்கிறது என கலா மாஸ்டர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று திருமணம் தனுஷ் - அக்ஷயா திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் இவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
காரில் அடிக்க வந்தனர்; அசிங்கப்படுத்திய காதலன்! பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் பகிர்ந்த கண்ணீர் கதை!