
இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், சூர்யா கதையின் நாயகனாக நடிக்க லிஜோ மோல் மற்றும் மணிகண்டன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தில், 1993 இல் வாழ்ந்த இருளர் சாதியைச் சேர்ந்த ராஜா கண்ணு மற்றும் செங்கேணி தம்பதியினருக்கு, போலீசாரால் நடந்த அநீதியை தோலுரித்து காட்டி இருந்தார் இயக்குனர் ஞானவேல். செய்யாத தப்பை ஒப்புக்கொள்ள சொல்லி, வற்புறுத்தப்படும் ராஜா கண்ணு போலீசாரின் தாக்குதலால் மரணம் அடைகிறார். ஆனால் அவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் கதை ஒன்றை ஜோடிக்கின்றனர்.
70 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் உலக நாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தன்னுடைய கணவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என, கடைசி வரை சந்துரு என்கிற வழக்கறிஞரின் உதவியோடு செங்கேணி போராடுகிறார். இந்த வழக்கில் செங்கேணி வெற்றியும் பெறுகிறார். இந்த படத்தில் ராஜா கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்திருந்த நிலையில், செங்கேணியாக லிஜோ மோல் நடித்திருந்தார். வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, சுஜாதா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருந்தார். இந்த படத்தை ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தனர். கொரோனா சமயத்தில் வெளியான இந்த திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான போது, ஒரு முதியவரின் செயல் 'ஜெய் பீம்' படத்தில் தான் செய்த தவறை சுட்டி காட்டி, கலங்க வைத்ததாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் சூர்யா கூறியுள்ளார்.
காரில் அடிக்க வந்தனர்; அசிங்கப்படுத்திய காதலன்! பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் பகிர்ந்த கண்ணீர் கதை!
'அண்ணாத்த திரைப்படம் பார்க்க, சூர்யா திரையரங்கிற்கு சென்றபோது, 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அறிந்த முதியவர் ஒருவர், அப்படத்திற்காக டிக்கெட் வேண்டும் என அங்குள்ள டிக்கெட் கவுண்டர்களில் விசாரித்து கொண்டிருந்தாராம். அவர்கள் இந்த படம் ஓடிடி-யில் தான் ரிலீஸ் ஆகி உள்ளது என கூறிய போது, அந்த முதியவருக்கு அது புரியவில்லை. அப்போது இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்து மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என கலங்கியதாகவும், இனி அப்படி ஒரு தவறை செய்யக்கூடாது என நினைத்ததாகவும் நினைத்தாராம் சூர்யா.