பிக்பாஸில் ரெட் கார்டு வாங்கிய அதே நாள்; காதலியை கரம்பிடித்த பிரதீப் ஆண்டனி!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனியின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.

Pradeep antony Marriage

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெற்றி பெற்று பாப்புலர் ஆனவர்களைவிட சர்ச்சைக்குயில் சிக்கி பாப்புலர் ஆனவர்கள் தான் அதிகம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய போட்டியாளர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் லேட்டஸ்டாக இடம்பிடித்தவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த சீசனில் மிகவும் டஃப் ஆன போட்டியாளராகவும் பிரதீப் திகழ்ந்தார். டைட்டில் ஜெயிக்கும் அளவுக்கு அவருக்கு வாய்ப்பு இருந்தது.

Pradeep antony Marriage

ஆனால் கடந்த சீசனில் பங்கேற்ற மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ரவீனா ஆகியோர் சேர்ந்து பிரதீப் ஆண்டனியால் தங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசனும் இந்த பிரச்சனையை தீர விசாரிக்காமல் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இதனால் அவர் மீது கடும் விமர்சனங்களும் எழுந்தனர். அதற்கு முன்னர் வரை கமலின் முடிவுகள் எல்லாம் சரியாக இருக்கும் என்று கூறி வந்த ரசிகர்களே கமல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது ஒருதலைபட்சமாக இருந்ததாக சாடினர்.

இதையும் படியுங்கள்... ஆறாத ரணமாக உள்ள முதல் காதலியின் இறப்பு; 5 முறை தற்கொலைக்கு முயன்றேன் - பகீர் கிளப்பிய பிக் பாஸ் சத்யா


Pradeep antony Marriage

இந்த ரெட் கார்டு சர்ச்சைக்கு பின்னர் கமலின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியானது. கமல்ஹாசன் இந்த சீசனோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலக அதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பின்னர் பிரதீப் ஆண்டனிக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அவர் 100 நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் கூட இந்த வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறி தான். அதுமட்டுமின்றி பட வாய்ப்பும் பிரதீப்புக்கு கிடைத்துள்ளது.

Pradeep antony Marriage

இந்த நிலையில், பிரதீப் ஆண்டனிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பூஜாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தான் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். தற்போது அதே வாரத்தில் அதுவும் கமலின் பிறந்தநாள் அன்று பிரதீப் கல்யாணம் செய்து இருக்கிறார்.

Pradeep antony Marriage

பிரதீப் ஆண்டனியின் திருமணத்தில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் பிரதீப்பின் நலம் விரும்பியுமான சுரேஷ் சக்கரவர்த்தியும் கலந்துகொண்டார். கிறிஸ்த்துவ முறைப்படு சர்ச்சில் வைத்து பிரதீப் ஆண்டனி - பூஜா ஜோடியின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... காரில் அடிக்க வந்தனர்; அசிங்கப்படுத்திய காதலன்! பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலின் பகிர்ந்த கண்ணீர் கதை!

Latest Videos

click me!