பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்ட கதை; ஹீரோயின் உள்பட கார்த்திகை தீபம் சீரியலில் இவ்வளவு மாற்றமா?

Published : Nov 07, 2024, 01:15 PM IST

ஜீ தமிழில் கார்த்திக் ராஜ் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த கார்த்திகை தீபம் சீரியலின் கதைக்களம் திடீரென மாற்றப்பட்டுள்ளதோடு, நட்சத்திரங்களும் மாற்றப்பட்டு உள்ளனர்.

PREV
14
பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்ட கதை; ஹீரோயின் உள்பட கார்த்திகை தீபம் சீரியலில் இவ்வளவு மாற்றமா?
karthigai Deepam Serial

சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களில் டாப்பில் உள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதில் ஒளிபரப்பான செம்பருத்தி என்கிற சீரியல் டிஆர்பியில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்களையெல்லாம் அடிச்சு தூக்கி நம்பர் 1 இடத்தில் இருந்தது. அந்த சீரியலில் கார்த்திக் ராஜ் நாயகனாக நடித்திருந்தார். செம்பருத்தி சீரியல் முடிந்த பின்னர் அவரை வைத்து ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்கிற சீரியலை தொடங்கினர்.

24
karthigai Deepam Serial Karthik Raj

இந்த சீரியல் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிநடை போட்டு வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேஸிலும் அவ்வப்போது டாப் 10க்குள் நுழைந்து வருகிறது. இந்த சீரியலில் கார்த்திக்கிற்கு ஜோடியாக அர்த்திகா நடித்து வந்தார். நகரத்து வாழ்க்கையில் கூட்டுக் குரும்பத்தில் வாழும் காதல் ஜோடி சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இதில் கார்த்திக் அதே பெயருடனும், அர்த்திகா தீபாவாகவும் நடித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... TRP-யில் விஜய் டிவி படு மோசம்! புதிய தொடர்களை வைத்து ரேட்டிங்கை அடிச்சு பறக்கவிடும் சன் டிவி!

34
karthigai Deepam Serial New Heroine Vaishnavi

இந்த நிலையில், தற்போது அதிரடி மாற்றமாக கார்த்திகை தீபம் சீரியலின் கதைக்களத்தை டோட்டலாக மாற்றி இருக்கின்றனர். அதன்படி இந்த சீரியல் புத்தம்புதிய கிராமத்து கதைக்களத்துடன் புதிய நட்சத்திரங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான புரோமோ வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி கார்த்திக் இந்த சீரியலில் ஹீரோவாக தொடர்கிறார். ஆனால் ஹீரோயினாக நடித்து வந்த அர்த்திகாவை மாற்றி உள்ளனர்.

44
Zee Tamil karthigai Deepam Deepam Serial

அர்த்திகாவுக்கு பதிலாக வைஷ்ணவி என்பவர் நடிக்க உள்ளார். இவர் ஜீ கேரளம் சேனலில் நடித்து பாப்புலர் ஆனவர் ஆவார். அதேபோல் இந்த சீரியலில் வில்லியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்கிறார். இவர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக கலக்கி வரும் நிலையில் தற்போது கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டேஸ்வரி என்கிற கேரக்டரில் நடிக்கிறார். மேலும் பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இதன்மூலம் கார்த்திகை தீபம் சீரியல் புதுப்பொலிவுடன் சின்னத்திரையை கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது கதைக்களத்துடன் கூடிய கார்த்திகை தீபம் சீரியல் வருகிற திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்... 3 பழைய சீரியல்களை பேக்கப் பண்ணிவிட்டு... அடுத்தடுத்து 4 புதிய சீரியல்களை களமிறக்கும் சன் டிவி!

Read more Photos on
click me!

Recommended Stories