இந்த படத்தில் 2 பாடல்கள் மட்டுமே இருக்கும். படத்தின் ஒரு காட்சிக்கு ஒரு பாடல் வேண்டும் என்று இளையராஜாவிடம் சொல்லி இருக்கிறார் ஆர்.கே. செல்வமணி இளையராஜா 20 டியூன்களை போட்டு காண்பிக்க ஆர்.கே. செல்வமணிக்கு எந்த டியூனிலுமே திருப்தி வரவில்லை.
பின்னர், இளையாராவிடம், நான் ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்கிறேன். எனக்கு மெகபூபா மாதிரி ஒரு பாடல் வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
அதன்பின்னர் இளையராஜா டியூன் போட்ட பாடல் தான் ஆட்டமா தேரோட்டமா பாடல். மறைந்த பிரபல பாடகி ஸ்வர்ணலதா குரலில் வெளியான இந்த பாடல் எவர்க்ரீன் ஹிட் பாடலாக அமைந்தது. இன்றும் பலரின் பிளேஸ்ஸ்டுகளில் ஆக்கிரமித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் தன்னுடைய தொழில் மீது கொண்ட பக்தியின் காரணமாக, எந்தவித மறுப்பும் சொல்லாமல் அந்த முழு திரைப்படத்திற்கும் திறன்பட இசையமைத்து முடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் சிறியதும் பெரியதுமாய் மொத்தம் ஒன்பது பாடல்கள். ஆனால் இந்த ஒன்பது பாடல்களையும் ஒரே பாடகர், இரண்டே இரண்டு பாடகிகளை வைத்து ஒட்டுமொத்த திரைப்படத்தையும் முடித்திருப்பார் இளையராஜா.