நடிச்சது நச்சுனு நாலு படம்; தன்னைவிட 12 வயது மூத்த நடிகருடன் கல்யாணம்! யார் இந்த நடிகை?

Published : Nov 07, 2024, 10:34 AM ISTUpdated : Nov 07, 2024, 01:30 PM IST

தமிழில் நாலு படங்களில் நடித்த கையோடு சினிமாவை விட்டு விலகிவிட்டு தன்னைவிட வயதில் மூத்த நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகையின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் வைரலாகிறது.

PREV
17
நடிச்சது நச்சுனு நாலு படம்; தன்னைவிட 12 வயது மூத்த நடிகருடன் கல்யாணம்! யார் இந்த நடிகை?
Actress Childhood Photos

நடிகைகள் சினிமாவில் சில ஆண்டுகள் தான் மவுசு இருக்கும். அப்படி நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி போல் தமிழ் சினிமாவில் வந்த வேகத்தில் உச்சம் தொட்டு பின் திருமணம் செய்துகொண்ட ஒரு நடிகையை பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம். அந்த நடிகை தன்னைவிட 12 வயது மூத்த நடிகருடன் காதல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அந்த நடிகையின் குழந்தைப்பருவ புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

27
Nazriya Childhood Photos

அந்த நடிகை வேறுயாருமில்லை நஸ்ரியா தான். மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நஸ்ரியா, நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சில காலம் பணியாற்றினார். அதன்பின்னர் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த அவர், தன்னுடைய க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் நேரம். மலையாள படமான இது தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

37
Nazriya Nazim Childhood Photos

நேரம் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் நஸ்ரியாவுக்கு ஜோடியாக நிவின் பாலி நடித்திருந்தார். இதையடுத்து நஸ்ரியாவை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய திரைப்படம் என்றால் அது ராஜா ராணி தான். இப்படத்தில் ஆர்யாவை பிரதர், பிரதர் என கூறிவிட்டு அவர் மீதே காதல் வயப்படும் நஸ்ரியா, விபத்தில் இறக்கும் காட்சி காண்போர் கண்களை எல்லாம் கண்ணீர் குளமாக்கியது.

இதையும் படியுங்கள்... ஜெனிலியா முதல் நஸ்ரியா வரை; முதல் பட ஹீரோவையே கரெக்ட் பண்ணி காதல் கல்யாணம் செய்த நடிகைகள் லிஸ்ட் இதோ

47
Nazriya Rare Childhood Photos

அட்லீயின் ராஜா ராணி படத்தில் நடித்த பின்னர் நஸ்ரியாவுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தன. இதையடுத்து வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா, நையாண்டி ஆகிய படங்களில் நடித்த நஸ்ரியா, இந்த நான்கு படங்களுக்கு பின் சினிமாவை விட்டே விலகிவிட்டார். கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை காதலித்து கரம்பிடித்த நஸ்ரியா அதன்பின் தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை.

57
Nazriya Unseen Childhood Photos

நஸ்ரியாவும் பகத் பாசிலும் பெங்களூரு டேஸ் படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். அப்போது நஸ்ரியாவுக்கு வெறும் 19 வயது தான். அவர் தன்னைவிட 12 வயது மூத்தவரான நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். திருமணத்துக்கு பின் நஸ்ரியாவுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

67
Nazriya Nazim

குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் பகத் உடன் சேர்ந்து டிரான்ஸ் என்கிற படத்தில் நடித்த நஸ்ரியா, அதன்பின்னர் தெலுங்கில் அடடே சுந்தரா என்கிற படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து தமிழிலும் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த புறநானூறு படத்தில் நஸ்ரியா நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

77
Fahadh - Nazriya

குழந்தை பருவத்தில் செம்ம அழகாகவும் பப்ளியாகவும் இருக்கும் அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிறு வயதில் செம்ம க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஏஜ் இஸ் ஜஸ்ட் நம்பர்! நஸ்ரியா முதல் சாயிஷா வரை.. அதிக வயசு வித்தியாசத்தில் திருமணம் செய்த 14 பிரபலங்கள்!

click me!

Recommended Stories