
1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் நடிப்பில் வெளிவந்த எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் கோலோச்சியதை தொடர்ந்து அரசியலுக்கு தாவிய நெப்போலியன் திமுக சார்பாக போட்டியிட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இப்படி அரசியலில் செம்ம பிசியாக இயங்கி வந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் அனைத்தில் இருந்து விலகி குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நெப்போலியனின் இந்த முடிவுக்கு அவரது மூத்த மகன் தனுஷ் தான் காரணம். நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களின் தனுஷுக்கு சிறு வயதிலேயே தசைச் சிதைவு நோய் ஏற்பட்டதால் 10 வயதுக்கு மேல் அவரால் நடக்க முடியாமல் போனது.
இதற்காக இந்தியாவில் போதுமான சிகிச்சை இல்லாததால் தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன். மேலும் அங்கு ஐடி கம்பெனி ஒன்றை தொடங்கி நடத்தி வரும் நெப்போலியன், சொந்தமாக அரண்மனை போன்ற வீடு, பல நூறு ஏக்கரில் விலை நிலங்கள் ஆகியவற்றை வாங்கி அங்கு வாழ்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... நெப்போலியன் மகன் தனுஷ் - அக்ஷயா ஜோடியின் ப்ரீ வெட்டிங் கிளிக்ஸ்
நெப்போலியனின் மகன் தனுஷுக்கு தற்போது 25 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்துபார்க்க ஆசைப்பட்ட அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்கிற பெண்ணுக்கும் தன் மகன் தனுஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் செய்துவைத்தார். பின்னர் திருமணத்தை தனுஷின் பேவரைட் நாடான ஜப்பானில் நடத்த முடிவு செய்த நெப்போலியன் அங்கு தடபுடலாக ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.
நெப்போலியன் மகன் தனுஷுக்கு விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் அவரை கப்பல் வழியாக அமெரிக்காவில் இருந்து ஜப்பான் அழைத்து வந்தார் நெப்போலியன். சுமார் ஒரு மாதம் கப்பல் பயணத்திற்கு பின் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு வந்து சேர்ந்துள்ளனர் நெப்போலியன் குடும்பத்தினர்.
அதேபோல் நெப்போலியன் மகனின் திருமணத்தில் கலந்துகொள்ள தமிழ் திரையுலக பிரபலங்களும் நெப்போலியனின் நெருங்கிய நண்பர்களுமான மீனா, ராதிகா, குஷ்பு, சரத்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஜப்பானுக்கு படையெடுத்துள்ளனர். அங்கு நெப்போலியன் மகன் தனுஷ் - அக்ஷயா ஜோடியின் ஹல்தி பங்க்ஷன் அங்குள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்று உள்ளது.
இதில் மாப்பிள்ளை தனுஷ் நடிகர் நெப்போலியன் என அனைவரும் மஞ்சள் நிற டிரெஸ் அணிந்து வந்திருந்தனர். பின்னர் நடைபெற்ற நலங்கில் மணமக்களுக்கு மஞ்சள் பூசி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நெப்போலியன் மகன் தனுஷின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... மகனின் திருமண தேதியை சட்டென அறிவித்த Napoleon! அரசாணை போல் ஓலைச்சுவடி வடிவில் பத்திரிக்கை!