ஒன்னு இல்ல ரெண்டு இல்ல; மொத்தம் 12 படங்கள் - கோலிவுட்டின் பிசி மேனாக வலம் வரும் டாப் நடிகர்!

Kollywood Actor : தமிழ் மொழியை பொறுத்தவரை அதிக படங்களை தனது லைன் அப்பில் வைத்துள்ள டாப் நடிகராக மாறியுள்ளார் ஒரு மிரட்டல் நடிகர்.

Kollywood Actors

தமிழ் மொழி திரைப்படங்களை பொருத்தவரை இந்த ஆண்டின் தொடக்கம் சற்று டல் அடித்தாலும், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பல சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படங்கள் தமிழ் திரை உலகில் வெளியானது. கமர்ஷியல் ரீதியாகவும், கன்டென்ட் ரீதியாகவும் தமிழ் மொழி திரைப்படங்கள் உலக சினிமா அரங்கில் மின்னியது குறிப்பிடத்தக்கது. பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமல்லாமல் "ரப்பர் பந்து", "பிளாக்", "மகாராஜா" மற்றும் "வாழை" போன்ற பல சிறு பட்ஜெட் திரைப்படங்களும் உலக அரங்கில் தமிழ் சினிமாவை உயர்த்திப் பிடித்தது. அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் ஏற்கனவே இந்த ஆண்டு தன்னுடைய 2 திரைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

ஜெமினி மட்டும் அல்ல; சாவித்ரியின் வாழ்க்கையை சீரழித்த அரசியல்வாதி யார்?

Dhanush

அந்த நடிகர் வேறு யாருமல்ல பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் தான். ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கின்ற திரைப்படத்தை அவர் வெளியிட்ட நிலையில், அதைத்தொடர்ந்து அவருடைய சொந்த இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ராயன். மேலும் அவருடைய நடிப்பில் தற்பொழுது குபேரா மற்றும் இட்லி கடை உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Actor Dhanush

இப்போது நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் லைனில் இருக்கும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.. இயக்குனராக அவர் மூன்றாவது முறையாக களமிறங்கி இருக்கும் திரைப்படம் தான் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்கின்ற திரைப்படம். அதைத்தொடர்ந்து சேகர் கமுலா இயக்கத்தில் "குபேரா" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். அவருடைய நான்காவது இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் "இட்லி கடை". அந்த திரைப்படத்திற்கான பணிகளும் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மீண்டும் பிரபல இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகும் இசைஞானி இளைய ராஜாவின் பயோ பிக்கில் அவர் அவர் நடிக்க உள்ளார். அதேபோல ஆனந்தராஜ் இயக்கத்தில் ஒரு பாலிவுட் திரைப்படத்திலும் அவர் விரைவில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை கூறப்பட்ட திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளோடு வெளியான திரைப்படங்களாகும்.

Asuran

போர் தொழில் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவோடு வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். அதேபோல அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைந்து கோபுரம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும், தளபதி 69 படத்தை முடித்த பிறகு எச் வினோத் செவன் ஸ்கிரீன் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும், ரப்பர் பந்து இயக்குனர் தமிழ், டான் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எடுக்க உள்ள ஒரு திரைப்படத்திலும் நடிக்கிறார் தனுஷ். மேலும் மாரி செல்வராஜ் குறிப்பிட்ட அந்த பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படத்திலும், வெற்றிமாறனின் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இது மட்டும் இல்லாமல் மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமரன் படத்திற்கு முன்பே, தன் படத்தில் முகுந்தனுக்கு மரியாதை செலுத்திய கோலிவுட் நடிகர் - யார் அவர்?

Latest Videos

click me!