அமரன் படத்திற்கு முன்பே, தன் படத்தில் முகுந்தனுக்கு மரியாதை செலுத்திய கோலிவுட் நடிகர் - யார் அவர்?

Mukund Varadarajan : இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை சிவகார்த்திகேயன் "அமரன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு வெளிகாட்டியிருக்கிறார்.

Amaran Movie

சென்னை தாம்பரத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி பிறந்தவர் தான் இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டிற்கு பெருமை சேர்த்து வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன். கடந்த 2006ம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். 22 ஆவது ராஜ்புத் ரெஜிமெண்டில் இவர் பணியாற்றிய தனது 31 வது வயதில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடந்த ஒரு சண்டையில் நாட்டுக்காக தன்னுடைய இன்னுயிரை நீத்தார் முகுந்த் வரதராஜன். இந்நிலையில் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு இப்போது மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறி இருக்கிறது.

கங்குவா செம ஹிட்; உலக அளவில் உள்ள விநியோகஸ்தர்களை வைத்து வெற்றி விழா நடக்கும் - ஞானவேல் உறுதி!

Amaran

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ரங்கூன் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் இயக்குனராக களம் ராஜ்குமார் பெரியசாமி. சுமார் 7 ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு கடந்த தீபாவளி திருநாளில் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கி வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தை ஏற்று மிக நேர்த்தியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும் திரைப்படமாக அமரன் மாதிரி உள்ளது.


Sai Pallavi

ஆனால் அமரன் திரைப்படம் வெளியாவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரபல தமிழ் சினிமா நடிகர் ஒருவர் தன்னுடைய திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் முகுந்த் வரதராஜனின் பெருமையை பறைசாற்றும் வகையில் அவருடைய குடும்பத்தாரை அழைத்து அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்தது கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாக இசை வெளியீட்டு விழாவில் தான்.

Jaihind 2

கடந்த 1994 ஆம் ஆண்டு இயக்குனர் அர்ஜுன் இயக்கி நடித்திருந்த திரைப்படம் தான் ஜெய்ஹிந்த். சுமார் 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த திரைப்படத்தையும் அர்ஜுன் தான் இயக்கி நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரை அழைத்து அவர் இசை வெளியீட்டு விழாவை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் ஹீரோயினாக நடித்து அசத்திய ஒரே கோலிவுட் நகைச்சுவை நடிகை - யார் அவங்க தெரியுமா?

Latest Videos

click me!