திருநெல்வேலி பொண்ணை ஜப்பானில் கரம்பிடித்தார் நெப்போலியன் மகன் தனுஷ்!

First Published | Nov 7, 2024, 9:39 AM IST

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் அக்‌ஷயா ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Napoleon Son Dhanoosh - Akshaya Wedding

நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு சிறுவயதில் இருந்தே தசைச் சிதைவு என்கிற அரியவகை நோய் இருந்துள்ளது. இந்த நோய் ஒரு கட்டத்தில் தீவிரமாகி 10 வயதுக்கு மேல் தனுஷால் நடக்க முடியாமல் போனது. இதையடுத்து சித்த வைத்தியத்தின் மூலம் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நெப்போலியன், மகனுக்கு தேவையான மருத்துவ வசதி அமெரிக்காவில் இருந்ததால் குடும்பத்துடன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

Napoleon Son Dhanoosh - Akshaya Wedding

நெப்போலியன் தன் மகன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் யூடியூப்பர் இர்பான் நெப்போலியன் வீட்டுக்கு சென்றபோது தான் தெரிந்தது. நெப்போலியனின் மகன் தனுஷ், இர்பானின் தீவிர ரசிகன் என்பதால், அவரை நேரில் காண அவரது வீட்டுக்கு சென்றிருந்த இர்பான் அப்போது நெப்போலியன் அமெரிக்காவில் தன் மகனுக்காக பார்த்து பார்த்து கட்டியுள்ள அரண்மனை போன்ற வீட்டை ஹோம் டூர் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்... ஜப்பானில் ஜாம் ஜாம்னு நடைபெற்ற நெப்போலியன் மகன் தனுஷின் ஹல்தி பங்ஷன்!

Tap to resize

Napoleon Son Dhanoosh - Akshaya Wedding

அந்த வீடியோ பார்த்த பலரும் ஒரு தந்தை மகன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்க முடியுமா என்று தான் கேட்டனர். ஏனெனில் தன் மகனுக்கு தேவையான சகல வசதிகளையும் அந்த வீட்டில் செய்து கொடுத்திருக்கிறார் நெப்போலியன். இப்படி மகன் மீது உயிரையே வைத்திருக்கும் நெப்போலியன் அவருக்கு திருமணம் என்றால் சும்மாவிடுவாரா என்ன, அம்பானியையே மிஞ்சும் அளவும் தன் மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்தி உள்ளார் நெப்போலியன்.

Napoleon Son Dhanoosh - Akshaya Wedding

நெப்போலியன் மகன் தனுஷுக்கு ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருந்துள்ளது. அந்த கனவை நனவாக்கும் வகையில் தனுஷின் கல்யாணத்தையே ஜப்பானில் நடத்தி இருக்கிறார் நெப்போலியன். திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்கிற பெண்ணுடன் தனுஷுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர். தனுஷ் - அக்‌ஷயா ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... நெப்போலியன் மகன் தனுஷ் - அக்ஷயா ஜோடியின் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்

Latest Videos

click me!