பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்களின் ஒருவர் தான்? தர்ஷா குப்தா பகிர்ந்த தகவல்!

First Published | Nov 7, 2024, 5:16 PM IST

'பிக்பாஸ் சீசன் 8' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை, முன்னாள் போட்டியாளரான தர்ஷா குப்தா.. அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய பார்வையில் இருந்து கூறியுள்ளார்.
 

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கப்பட்டு, நேற்றுடன் வெற்றிகரமாக ஒரு மாதம் நிறைவடைந்தது. முதல் சீசனில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை, உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், பிக்பாஸ் சீசனில் 8-ல் இருந்து அதிரடியாக விலகுவதாக அறிவித்தார். எனவே கமல்ஹாசனுக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை தற்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
 

Vijay TV Bigg boss

விறுவிறுப்புக்கும்... பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர் சந்திரசேகர், அர்னவ், தர்ஷா குப்தா என மூன்று போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். கடந்த வாரம், அன்ஷிகா வெளியே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், நோ எலிமினேஷன் என கூறி பிக்பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு... 6 வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பி பிக்பாஸ் வீட்டை ரணகளம் ஆக்கியது.

'ஜெய்பீம்' படத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு? முதியவர் செயலால் கலங்கி நின்ற சூர்யா!
 

Tap to resize

Wild Card Entry

புதிய போட்டியாளர்களின் வருகையால்... ஏற்கனவே வீட்டில் உள்ள பழைய போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, புதிய போட்டியாளர்களை குறை கூறி வருகிறார்கள். குறிப்பாக வர்ஷினி வெங்கட், ரியா தியாகராஜனிக்கு எதிராக போட்டியாளர்கள் பலர் தங்களின் கருத்தை முன்வைத்து வருவதை பார்க்க முடிகிறது. எனவே இந்த வாரம் இவர்களுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி குரல் கொடுப்பாரா? யார் யாரை வெளுத்து வாங்க போகிறார்... என்கிற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.
 

Dharsha Gupta

தற்போது கதை சொல்லும் டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே போல் பழைய போட்டியாளர்கள் யாரேனும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டாக உள்ளே செல்வார்களா? என ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி... 3-ஆவது போட்டியாளராக வெளியேறிய தர்ஷா குப்தா, இந்த சீசன் வெற்றியாளர் யாராக இருப்பார்கள் என தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். 

70 வயதில் ராஜ வாழ்க்கை வாழும் உலக நாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Who is the bigg boss Title Winner

அதன்படி, ஆண் போட்டியாளர்களின் முத்துக்குமரன் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும், பெண் போட்டியாளர்களில் சௌந்தர்யா வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் ஒருவேளை வைல்டு கார்டாக நான் உள்ளே சென்றால்... நான் தான் ஜெயிப்பேன். டைட்டில் வில்லவில்லை என்றாலும், நிச்சயம் ஃபைனலிஸ்ட்டில் ஒருவராக இருப்பேன் என தெரிவித்துள்ளார். தர்ஷாவின் இந்த கணிப்பு நிஜமாகுமா? அதே போல் அவரின் ஆசைப்படி தர்ஷா வைல்டு கார்டாக பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்வாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!