தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும், விஜய், அஜித், விக்ரம், பிரபாஸ், நாகர்ஜுனா, சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. 35 வயதை கடந்த பின்னரும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா ஷெட்டி, தன்னுடைய மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.