நெப்போலியன் மகன் திருமணம்; ஜப்பானுக்கு படையெடுத்து வந்த கோலிவுட் பிரபலங்கள்!

Published : Nov 08, 2024, 09:50 AM ISTUpdated : Nov 08, 2024, 11:04 AM IST

நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட தமிழ் சினிமா பிரபலங்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV
17
நெப்போலியன் மகன் திருமணம்; ஜப்பானுக்கு படையெடுத்து வந்த கோலிவுட் பிரபலங்கள்!
Napoleon son Dhanoosh Marriage

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவருக்கு சுதா என்கிற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு தசைச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டதால் சிறு வயதில் இருந்தே அவரால் நடக்க முடியாமல் போனது. பின்னர் சித்த மருத்துவத்தின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்த தனுஷை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து சென்ற நெப்போலியன் அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

27
Napoleon son Dhanoosh Marriage

தமிழ்நாட்டில் சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு, அமெரிக்காவில் ஐடி கம்பெனி ஒன்றை தொடங்கி கோடி கோடியாய் சம்பாதித்து வரும் நெப்போலியன், அங்கு அம்பானி போல வாழ்ந்து வருகிறார். தன் மகன் தனுஷ் மீது உயிரையே வைத்துள்ள நெப்போலியன் அவர் என்ன ஆசைப்பட்டாலும் அதை செய்துவிடுகிறார்.

37
Napoleon son Dhanoosh Marriage

அதன்படி ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்த கனவை நனவாக்க முடிவெடுத்த நெப்போலியன், கையோடு மகனின் திருமணத்தையும் அங்கேயே நடத்த முடிவு செய்தார். தனுஷை விமானத்தில் அழைத்து செல்ல முடியாது என்பதால், அவருடன் ஒரு மாதம் கப்பலில் பயணித்து ஜப்பான் வந்தடைந்த நெப்போலியன் அங்கு திருமண வேலைகளையும் செய்து வந்தார்.

இதையும் படியுங்கள்...தனுஷ் - அக்ஷயா திருமணத்தில்.. தன் கல்யாண ஆசையை வெளிப்படுத்திய நெப்போலியனின் 2-ஆவது மகன் குணால்!

47
Napoleon son Dhanoosh Marriage

இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்காக பல கோடி செலவு செய்திருக்கிறார் நெப்போலியன்.

57
Napoleon son Dhanoosh Marriage

நெப்போலியன் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள கோலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் ஜப்பானுக்கு படையெடுத்து வந்துள்ளனர். குறிப்பாக நடிகைகள் ராதிகா, குஷ்பு, மீனா, கலா மாஸ்டர், நடிகர்கள் சரத்குமார், பாண்டியராஜன், கார்த்தி என கோலிவுட் படையே திரண்டு வந்து நெப்போலியன் மகனை வாழ்த்தி உள்ளது.

67
Napoleon son Dhanoosh Marriage

நெப்போலியன் மகனின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி தன் மகனின் திருமணத்தை நடத்தி முடித்ததால் எமோஷனல் ஆன நெப்போலியன், தனுஷ் தாலி கட்டியதும் கண்ணீர்விட்டு அழுதார்.

77
Napoleon son Dhanoosh Marriage

ஜப்பானில் மகனின் திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி முடித்துள்ள நடிகர் நெப்போலியனுக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவதோடு, ஒரு தந்தை, மகன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்க முடியுமா என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...திருநெல்வேலி பொண்ணை ஜப்பானில் கரம்பிடித்தார் நெப்போலியன் மகன் தனுஷ்!

click me!

Recommended Stories