நடிகையை திருமணம் செய்ய போகும் நிகாரிக்காவின் முன்னாள் கணவர் சைதன்யா! யார் அவர்?

First Published | Nov 8, 2024, 5:49 PM IST

நடிகை நிஹாரிகாவின் முன்னாள் கணவர் ஜொன்னலகட்டா சைதன்யா, விரைவில் ஒரு நடிகையை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக டோலிவுட் திரையுலகில் ஒரு தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

Niharika

நிஹாரிகாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த, அவரது முன்னாள் கணவர் ஜொன்னலகட்டா சைதன்யா, விரைவில் மறுமணம் செய்யவுள்ளார்.  அவர் ஒரு நடிகையை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த நடிகை யார்..? இந்த செய்தியில் எவ்வளவு உண்மை..? இருக்கிறது என்பதை பார்ப்போம்.
 

Niharika and Chaitanya

மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தில் தொடர்ச்சியாக இரண்டு விவாகரத்து செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மெகா சகோதரர் நாகபாபுவின் மகள் நிஹாரிகாவும் ஒருவர். திருமணமாகி மூன்று ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக நிஹாரிகாவும் - அவரின் கணவர் சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த விஷயத்தில் நிஹாரிகா தரப்பில்தான் தவறுகள் இருந்ததாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர். திருமணத்திற்குப் பிறகு நிஹாரிகா சென்ற விருந்தில் போதைப்பொருள் சிக்கியது. அதே போல் ஜிம் பயிற்சியாளருடன் நிஹாரிகா நெருக்கமாக எடுத்து கொண்ட வீடியோக்கள் வெளியானதால், அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஐபிஎஸ் வீட்டிற்கு மருமகளாகச் சென்ற நிஹாரிகா, இப்படிச் செய்வது குறித்து பலவிதமான செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் - லோவன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது!

Tap to resize

Chaitanya Second Marriage

இது போன்ற விமர்சனங்கள் எழுந்த சில மாதங்களிலேயே... நிஹாரிகா தனது விவாகரத்து குறித்து சில பதிவுகளை வெளியிட்டார். இரு வீட்டு தரப்புக்கும் பேச்சு வார்த்தை நடந்த நிலையில், அது தோல்வியில் முடிந்தது. மேலும் நிஹாரிகா தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என சைதன்யா குடும்பத்தினர் தொடர்ந்து குற்றங்களை முன் வைத்ததாக கூறப்பட்டது.
 

Niharika Konidela Divorce

நிஹாரிகா - சைதன்யாவுக்கு விவாகரத்தாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் நிலையில், தற்போது இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக டோலிவுட் திரையுலகில் செய்திகள் வைரலாகி வருகிறது. சைதன்யா திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் ஒரு நடிகை என்றும், அவர் நிஹாரிகாவின் தோழி என்றும் கூறப்படும் நிலையில்... இதுவரை அவர் யார் என்கிற தகவல் வெளியாகவில்லை. அதே போல் இதுகுறித்து சைதன்யா தரப்பில் இருந்தும் எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

காதலுக்காக சினிமாவை உதறிவிட்டு... 16 வயது மூத்த பிளே பாய் நடிகரை திருமணம் செய்த இந்த குழந்தை யார் தெரியுமா?
 

Niharika About Second Marriage

நடிகை நிஹாரிகா தன்னுடைய விவாகரத்தான பின்னர், தனக்கு 30 வயது தான் ஆகிறது. எனவே கண்டிப்பாக  நல்ல மனிதர் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்னும் சில வருடங்களில் நிஹாரிகாவின் திருமணம் குறித்த தகவல் வெளியானாலும் அது ஆச்சர்யப்படுவதற்கில்லை.
 

Chaitanya second marriage not Confirm

அதே போல் நிஹாரிகாவுடனான விவாகரத்துக்கு பின் மன உளைச்சலுக்கு ஆளான சைதன்யா, சில காலம் ஆசிரமத்தில் தங்கி, அதில் இருந்து வெளியே வந்தார். இந்த தகவல் அவர் சமீபத்தில் பதிவிட்டபதிவின் மூலம் தெரிய வந்தது. இந்தப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நெப்போலியன் மகன் திருமணத்தில் பரிமாறப்பட்ட 70 வகையான இந்திய உணவுகள்! 4 மாதமாக நடந்த ஏற்பாடு!

Latest Videos

click me!