புஷ்பாவில் பட்டையை கிளப்பிய சமந்தா; அப்போ புஷ்பா 2வில் யாரு? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Pushpa 2 : புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றது போலவே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் துள்ளல் இசை பாடல் ஒன்று அமைந்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

Pushpa

தெலுங்கு மொழி திரைப்படம் என்றாலும், இந்திய அளவில் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்த திரைப்படங்களில் ஒன்று தான் புஷ்பா. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சரி இந்த திரைப்படத்தின் கதையும் சரி மக்களால் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. சுகுமார் இயக்கத்தில் புஷ்பா திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ராஷ்மிக்கா மந்தானா, மிரட்டல் நடிகர் பகத் பாசில் மற்றும் சுனில் உள்ளிட்ட பலரது நாடிபில் வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 390 கோடி வசூல் செய்து மெகா ஹிட் படமாக மாறியது. 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா படத்திற்கு பிறகு இந்த 3 ஆண்டுகளில் அல்லு அர்ஜுன் வேறு படங்களில் நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமரன் படம் ஓடும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு? திடீர்னு என்ன ஆச்சு?

Allu Arjun

அந்த திரைப்படம் வெளியான பிறகு சில மாத இடைவெளிக்கு பிறகு தனது புஷ்பா படத்தின் 2ம் பாக பணிகளில் அல்லு அர்ஜுன் நடிக்க துவங்கினார். இந்த ஆண்டு துவக்கத்திலேயே புஷ்பா 2 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் தான் இப்பொது புஷ்பா படம் வெளியாகவுள்ளது. சுமார் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், உலக அளவில் 1000 கோடி ரூபாய் அளவில் புஷ்பா 2 வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பாகத்தின் முடிவிலிருந்து இந்த பாகம் துவங்கவுள்ளது.


Fahadh Faasil

இந்த நிலையில் புஷ்பா 1 படத்தில் ஒலித்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டானது. குறிப்பாக சித் ஸ்ரீராம் குரலில் ஒலித்த பார்வை கற்பூர தீபமே ஸ்ரீவள்ளி என்ற பாடலும், கிராமிய இசை பாடகி ராஜலட்சுமி செந்தில் கணேசன் குரலில் ஒலித்த ஐயா சாமி பாடலும் மெகா ஹிட்டானது. ஆனால் இந்திய அளவில் சும்மா பட்டையை கிளப்பிய பாடல் என்றால், ஆண்ட்ரியா குரலில், சமந்தா நடனத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஒரு பாடலில் நடனமாட நடிகை சமந்தா சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக சில தகவல்களும் வெளியானது.

SreLeela

இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்திலும் அதே போல துள்ளல் இசையில் ஒரு பாடல் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் வெளியான அந்த பாடலில் நடிகை சமந்தா நடனமாடிய நிலையில், தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் வருகின்ற அந்த பாடலில் பிரபல தெலுங்கு திரையுலக நடிகை ஸ்ரீ லீலா நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில் கோட் திரைப்படத்தில் வரும் மட்ட பாடலில் நடனமாட படக்குழு முதலில் ஸ்ரீலிலாவை அணுகுவதாகவும் ஆனால் அவர் ஒரே ஒரு பாடலில் டான்ஸ் ஆட மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.  

பிக்பாஸ் சௌந்தர்யாவிடம் நடந்த Scam; 2 நிமிடத்தில் 17 லட்சம் அபேஸ்! அவரே கூறிய தகவல்!

Latest Videos

click me!