திருமணம் முடிந்த கையேடு நெப்போலியன் மகன் தனுஷ் மனைவியோடு எங்கு அவுட்டிங் போயிருக்காரு பாருங்க!

First Published | Nov 9, 2024, 11:14 AM IST

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்கிற பெண்ணுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்த நிலையில் இவர்களின் அவுட்டிங் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

Dhanoosh and Akshaya Outing

தமிழ் சினிமாவில், ராஜ்கிரணுக்கு அடுத்தபடியாக வேட்டியை மடித்து கட்டி... தொடையை தட்டி ஹீரோக்களையே தன்னுடைய படங்களில் புரட்டி எடுத்தவர் நெப்போலியன். கிராமத்து கதையம்சம் கொண்ட அதிரடி படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நெப்போலியன், தன்னுடைய மகன்களுக்காக சினிமா - அரசியல் என இரண்டில் இருந்தும் விலகி, அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

Dhanoosh and Akshaya Photos

நடிப்பை தாண்டி, ஐடி துறையில், அமெரிக்காவையே... அரச வைத்து வரும் நெப்போலியன். ஆரம்பத்தில் ஐடி நிறுவனத்தை நெப்போலியன் பார்த்து கொண்டிருந்தாலும், சமீப காலமாக நெப்போலியனின் மகன்களான தனுஷ் மற்றும் குணால் தான் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

'கார்த்திகை தீபம் 2' சீரியலில் இருந்து திட்டம் போட்டு நீக்கிவிட்டனர்! ஹீரோயின் அர்த்திகா பகீர் குற்றச்சாட்டு!

Tap to resize

Napolen Son Dhanoosh

இந்நிலையில் கடந்த நவம்பர் 7-ஆம் தேதி, நெப்போலியனின் மூத்த மகனான தனுஷுக்கும், திருநெல்வேலியை சேர்ந்த பெண், அக்ஷயாவுக்கும்... தனுஷின் கனவு தேசமான ஜப்பானில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

After Marriage First outing

இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டது மட்டும் இன்றி, நெப்போலியனின் உறவினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜாப்பினிலேயே வகை வகையான இந்திய உணவுகளை சமைக்க வைத்தும், தமிழ் கலாச்சாரத்தின் படி திருமணத்தையும் நடத்தி முடித்தார்.

தேவயானிக்காக கெட்டு போன உணவை சாப்பிட்ட சரத்குமார்? பிரபலம் கூறிய தகவல்!

Dhanoosh

தனுஷ் - அக்ஷயாவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வெட்டிங் போட்டோ ஷூட் சமூக வலைத்தளத்தில், வைரலாகி வந்த நிலையில், இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னர் முதல் முறையாக அவுட்டிங் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Akshaya Viral Pics

தற்போது டோக்கியோவில் இருக்கும் இவர்கள், அங்குள்ள ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றிற்கு தான்.. சென்றுள்ளனர். ரெஸ்ட்டாரெண்டில் தனுஷ் - அக்ஷயா இருவரும் பேசி கொண்டிருக்கும் போது அக்ஷயா வெட்கத்தில் முகம் சிவக்க சிரிக்கிறார். இந்த ஜோடி எப்போதும் இதே போல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சௌந்தர்யாவிடம் நடந்த Scam; 2 நிமிடத்தில் 17 லட்சம் அபேஸ்! அவரே கூறிய தகவல்!

Latest Videos

click me!