
Anushka Shetty Prakash Kovelamudi Secret Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. வேட்டைக்காரன், சிங்கம், சிங்கம் 2, இரண்டாம் உலகம், என்னை அறிந்தால் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு தமிழ் சினிமா பக்கம் வரவே இல்லை. கடைசியாக 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நிசப்தம் என்ற படம் தெலுங்கு படம் தமிழிலும் எடுக்கப்பட்டு வெளியானது.
3 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்ற தெலுங்கு படம் வெளியானது. அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு காதி என்ற தெலுங்கு படத்திலும், காதனார் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். இந்த இரு படங்களுமே 2025 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தான் அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் தொடர்பாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம், சைஸ் ஜீரோ இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடியுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்தி வெளியானது. இதற்கு அனுஷ்கா ஷெட்டி காரசாரமாக பதிலளித்துள்ளார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுஷ்கா ஷெட்டி தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரது திருமணம் தொடர்பாக பேச்சுகள் சமூக வலைதளங்களில் அடிபட்டது. இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக பாகுபலி படம் ஆரம்பித்த போதிலிருந்து அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபாஸ் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தனர்.
தற்போது மீண்டும் அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் குறித்து வதந்தி பரவ தொடங்கியுள்ளது. அதுவும் இயக்குநர் உடன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சைஸ் ஜீரோ இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடியை அனுஷ்கா ஷெட்டி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சைஸ் ஜீரோ படத்தின் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடி உடன் அனுஷ்கா ஷெட்டி இணைந்து பணியாற்றினார். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும், 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் தனியார் பத்திரிக்கை நிறுவனத்துடன் நடந்த நேர்காணலில் திருமணம் குறித்து அனுஷ்கா ஷெட்டில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கும் பிரகாஷ் கோவெலமுடிக்கும் திருமணமா? இல்லை. அது உண்மையில்லை.
இந்த வதந்திகளால் நான் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. என் திருமணம் ஏன் இவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியவில்லை. திருமண உறவை யாரும் மறைக்க முடியாது. அப்படியிருக்கும் போது எனது திருமணத்தை நான் எப்படி மறைக்க முடியும். இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். என்ககு தனிப்பட்ட இடம் உள்ளது. அதில் யாராவது உள்ளே வர முயன்றால் அது என்ககு பிடிக்காது. எனது திருமணம் நடைபெறும் நாள் மக்களுக்கு ஒருநாள் தெரியும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் அனுஷ்கா ஷெட்டி துபாயைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இருவீட்டாரும் ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகைகளில் அனுஷ்கா ஷெட்டியும் ஒருவர். அவருக்கு தற்போது 43 வயதாகிறது. இதே போன்று நடிகை தமன்னாவும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 41 வயதாகும் த்ரிஷாவும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.