திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகள், லைம் லைட்டில் இருக்கும் போதே... திடீர் என திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகி விடுகிறார்கள். குறிப்பாக சிலர் மட்டுமே திருமணம் ஆகி, குழந்தை பெற்று கொண்ட பின்னர், மீண்டும் கம் பேக் கொடுக்கிறார்கள். அப்படி மீண்டும் கம் பேக் கொடுத்து, அசத்தி வரும் நடிகைகள் பற்றியும்... திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகைகள் பற்றியும் தான் இதில் பார்க்க போகிறோம்.
கோலிவுட்,பாலிவுட்டி, மாலிவுட் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ரவுண்டு கட்டி நடித்தவர் நடிகை அசின். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான கஜினி, சிவகாசி, தசாவத்திரம் போன்ற படங்கள் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதே போல் மலையாளம், இந்தி போன்ற மொழியிலும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை 2016 இல் திருமணம் செய்து கொண்டு, நடிப்பை விட்டு விலகினார். தற்போது இவருக்கு ஆரின் என்கிற மகள் ஒருவரும் உள்ளார். அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டு வரும் அசின், திருமணத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என ரசிகர்களிடம் தெரிவித்த பின்பே திரையுலகை விட்டு விலகினார். இவர் திரையுலகை விட்டு விலகினாலும், இவருக்கென தற்போது வரை பல ரசிகர்கள் இருந்து கொண்டு தான் உள்ளனர்.
மேலும் செய்திகள்: இரண்டாம் நாளே பிக்பாஸ் வீட்டில் அழுகாச்சியாக மாறிய நடிகை..! அட கடவுளே இதெல்லாம் ஒரு பிரச்சனையா? வீடியோ..
நம்ரதா ஷிரோத்கர், முன்னாள் மிஸ் இந்தியா... என்கிற அடையாளத்தோடு, தென்னிந்திய மொழி மற்றும் பாலிவுட்டில் திரைப்படங்களில் நடித்த இவர், தெலுங்கு படமான வம்ஷி என்கிற படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், நம்ரதா திருமணத்திற்கு பின் முழுமையாக திரையுலகை விட்டே விலகினார். தற்போது கணவர், குழந்தைகள் சிதாரா மற்றும் கௌதமையும் கவனித்து கொள்வதையே மிகப்பெரிய பொறுப்பாக செய்து வருகிறார்.
ஜோதிகா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர், நடிகர் சூர்யாவுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'காக்கா காக்கா' படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து நட்பு காதலாக மலர்ந்தது. பின்னர் சூர்யா வீட்டில் ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ள சில எதிர்ப்புகள் கிளம்பினாலும், அனைத்தையும் கடந்து சூர்யா கடந்த 2006 இல் ஜோதிகாவை கரம்பிடித்தார். இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு தியா, தேவ், என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகை விட்டு விலகிய ஜோதிகா சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2015 ஆம் ஆண்டு முன்பை விட வலுவாக மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் நடிக்க வந்தார். தொடர்ந்து பெண்களை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.
மேலும் செய்திகள்: Nayanthara: நயன் மீது ஏற்கனவே செம்ம கடுப்பு... இப்போ வெளியில் தலைகாட்ட முடியல? குமுறும் விக்கி உறவினர்கள்!
ஜெனிலியா டிசோசா, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் துரு துரு நாயகி என பெயர் எடுத்தவர். சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்குடன் இணைத்து திரைப்படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், பின்னர் திருமணத்தில் முடிந்தது. மிகவும் ஜாலியான நட்சத்திர ஜோடியாக அறியப்படும் இவர்களுக்கு, ரியான் மற்றும் ரஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கடந்த ஆண்டு, கணவரின் படத்தில் மட்டுமே ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட ஜெனிலியா பல வருடங்களுக்குப் பிறகு தற்போது கன்னடப் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஹிட் படங்களில் நடித்துள்ளவர் பூமிகா சாவ்லா. பாலிவுட் திரைப்படங்களிலும் பிரபலமான இவர், பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், தனது நீண்டகால காதலரும் யோகா ஆசிரியருமான பாரத் தாக்கூரை என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திக்கு பின்னர் திரையுலகை விட்டு விலகிய இவருக்கு அப்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னர் ஜோதிகா நடிப்பது போன்ற அழுத்தமான கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும், அக்கா... அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் தற்போது நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: Rahul Koli Death: அதிர்ச்சி... 10 வயது குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் அதிர்ச்சி மரணம்..!
நடிகை நஸ்ரியா நஜிம் கடந்த 2014 ஆம் ஆண்டு, பிரபல மலையாள முன்னணி நடிகை ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட போது, தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகிய நஸ்ரியா, மீண்டும் தன்னுடைய கணவருக்கு ஜோடியாகவே மலையாள படம் ஒன்றில் கம் பேக் கொடுத்தார். மேலும் படுத்தது சில படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நுழைந்து, பின்னர் கதாநாயகியாக மாறியவர். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வந்த இவர், அஜித் குமாருடன் 'அமர்க்களம்' படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்க துவங்கினர். இந்த காதல் திருமணத்திலும் முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகிய ஷாலினி, மகள் மற்றும் மகனை பொறுப்புள்ள அம்மாவாக கவனித்து வருகிறார்.