சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நாயகர்களுடன் இவர் ஜோடி போட்ட தன் மூலம் பிரபலமானவர்.
29
Trisha
90களின் பிற்பகுதிகள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தவர் திரிஷா. விஜய்சேதுபதியுடன் 96 என்னும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
39
Trisha
பொன்னியின் செல்வன் படத்தில் சோழ இளவரசி குந்தவையாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் திரிஷா.
குந்தவை கதாபாத்திரத்திற்கு இவர் தான் பொருத்தமானவர் எனவும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 39 வயதாகும் திரிஷா. வயதுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அளவிற்கு அழகு கொஞ்சம் பதுமையாக வலம் வருகிறார்.
59
Trisha
முன்னதாக பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் விழாக்களில் வண்ண வண்ண சேலையில் பார்ப்பவர்களின் கண்களை அப்படியே கவ்விக்கொள்ளும் அழகில் ஜொலித்தார் திரிஷா.
இந்நிலையில் விழா ஒன்றில் திரிஷாவின் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது.
79
Trisha
த்ரிஷாவிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டதற்கு; எனக்கே தெரியாது. ஒருவரை பார்த்தால் அவருடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழப் போகிறோம் என்று தோன்ற வேண்டும். திருமணமான பிறகு விவாகரத்து பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.
89
Trisha
முன்னதாக பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, விஜய், சிம்பு உள்ளிட்டோருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் திரிஷா.
99
Trisha
பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனுடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதுவும் பாதியிலேயே நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது.