பாக்கிய லட்சுமி சீரியலுக்கு இந்த நிலையா? TRP ரேட்டிங்கில் அடித்து தும்சம் செய்த சன் டிவி தொடர்கள்..!

First Published | Nov 26, 2022, 11:26 AM IST

TRP ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை கைப்பற்றிய சீரியல் குறித்த விவரம் இதோ...
 

வாரத்திற்கு 4 புதிய படங்கள் ரிலீஸ் ஆனாலும், திரையரங்கு சென்று படம் பார்க்க முடியாத... இல்லத்தரசிகளுக்கு எப்போதுமே ஃபேவரட் என்றால், அது தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் தான்.
 

அதிலும் சமீப காலமாக சீரியல்கள், இளம் ரசிகர்கள் மனதையும் கவரும் விதத்தில் எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக சீரியல்கள் நடிக்கும் பிரபலங்களும் வெள்ளித்திரை நடிகர்களுக்கு நிகராக பார்க்கப்படுகிறார்கள்.

சமந்தாவை விவாகரத்து செய்த ஒரே வருடத்தில்... நடிகையுடன் டேட்டிங் செய்யும் நாக சைதன்யா! வைரலாகும் புகைப்படம்!

Tap to resize

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், சீரியலில் நடித்தால் அவர்களுக்கு இயக்குனர்கள் பட வாய்ப்பு கொடுக்க தயங்குவார்கள் என கூறப்பட்டது உண்டு. அதே போல் வெள்ளிதியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நடிககைகள் தான் சீரியல்களில் நடிப்பார்கள் என பேசப்பட்டது.
 

Priya Bhavani Shankar

ஆனால் அனைவருடைய கண்ணோட்டமும் தற்போது மாறியுள்ளது. சின்னத்திரையில் தன்னுடைய திறமையை நிரூபித்து பின்னர் வெள்ளி திரையிலிலும் ப்ரியபவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் வெற்றி வாகை சூட்டியுள்ளது அனைவருமே அறிந்தது தான். 

Vanitha: நடிகை மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள்..! என்ன நடந்தது? மகள் வனிதா விஜயகுமார் கூறிய அதிர்ச்சி தகவல்..!
 

இந்நிலையில், கடந்த வாரம் சின்னத்திரையில் டாப் 5 டிஆர்பி ரேட்டிங் பிடித்த சீரியல்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் முதல் நான்கு இடங்களை சன் டிவி தொடர்கள் பிடித்து தும்சம் செய்துள்ளது. 5 ஆவது இடத்தில் ஒரே ஒரு விஜய் டிவி சீரியல் உள்ளது.
 

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 10.86, புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் ஒரு பாயிண்ட் வித்தியாசத்தில் 10.85 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில், 10.54 புள்ளிகளுடன் சுந்தரி சீரியலும், 9.51 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் ரோஜா சீரியலும் உள்ளது.

Kayal Serial: 'கயல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்! யார் தெரியுமா..?

ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியின் டாப் சேரியலான பாக்கியலட்சுமி தொடர்  9, புள்ளிகளுடன் இருக்கிறது. அதே நேரம், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் இந்த லிஸ்டில் இடம்பிடிக்காதது ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம் என்றே கூறலாம்.  

Latest Videos

click me!