Trending Netflix Series: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தற்போது ரசிகர்களை அதிகம் கவரும் 5 வெப் சீரிஸ்கள் டிரெண்டாகி வருகின்றன. காதல், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லர் என ஒவ்வொரு தொடரும் வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. அவற்றை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வார இறுதியில் என்ன பார்க்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். குறிப்பாக சஸ்பென்ஸ், ட்ரில்லர், காதல், ஆக்ஷன் என வித்தியாசமான கதைகளை விரும்பும் பார்வையாளர்களின் கவனம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் மீது திரும்பியுள்ளது. சமீப நாட்களில் உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டு வரும் ஐந்து வெப் சீரீஸ்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஒவ்வொரு தொடரும் வெவ்வேறு கதை, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
25
பிரிட்ஜர்டன் சீசன் 4
இந்த பட்டியலில் முதலில் இடம்பிடிப்பது பிரிட்ஜர்டன் சீசன் 4. முகமூடி விருந்து ஒன்றில் சந்திக்கும் மர்ம இளம்பெண்ணை தேடும் பெனடிக்ட் பிரிட்ஜர்டனின் காதல் பயணமே இதன் மையக்கதை. சமூக அந்தஸ்தையும் வர்க்க வேறுபாடுகளையும் கடந்து செல்லும் இந்த காதல் கதை ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்ததாக தென் கொரிய கல்வி அமைப்பில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மாணவர் துன்புறுத்தலை மையமாகக் கொண்ட டீச் யூ எ லெசன் தொடரும் கவனம் பெற்று வருகிறது.
35
ஹிஸ் அண்ட் ஹெர்ஸ்
த்ரில்லர் ரசிகர்களுக்கு ஹிஸ் அண்ட் ஹெர்ஸ் வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. தனது சொந்த ஊரில் நடந்த கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கும் முன்னாள் செய்தி வாசிப்பாளர், அந்த வழக்கின் விசாரணை அதிகாரி தனது பிரிந்த கணவர் கண்டறிகிறார். தொடர்ந்து வெளிவரும் ரகசியங்கள் கதையை உளவியல் த்ரில்லராக மாற்றுகின்றன. இதேபோல் ஒன் பீஸ் சீசன் 2 தொடரில் லஃபி மற்றும் அவரது குழுவின் புதிய சாகசங்கள் ரசிகர்களை தொடர்ந்து ஈர்க்கின்றன.
மற்றொரு தொடரான தி வொண்டர்ஃபுல் ஃபூல்ஸ், உலக அழிவு குறித்த அச்சம் பரவியிருந்த 1990களின் இறுதிக்காலத்தை பின்னணியாகக் கொண்டுள்ளது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சிலருக்கு எதிர்பாராத அதிசய சக்திகள் கிடைத்த பிறகு அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களே இதன் கதை. கற்பனை மற்றும் சஸ்பென்ஸ் கலந்த இந்த தொடர் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
55
பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்
மொத்தத்தில், காதல், மர்மம், குற்ற விசாரணை, ஆக்ஷன் மற்றும் கற்பனை என அனைத்து வகை ரசிகர்களுக்கும் ஏற்ற உள்ளடக்கங்களை நெட்பிளிக்ஸ் இந்த வாரம் வழங்கியுள்ளது. நீண்ட நேரம் சலிப்பில்லாமல் பார்க்கக்கூடிய வெப் சீரிஸ்களைத் தேடுபவர்களுக்கு இந்த ஐந்து தொடர்களும் சிறந்த தேர்வாக அமையும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.