Pandian Stores 2 Serial 30 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி கல்யாணத்துக்கு நோ சொன்னதால் கடுப்பான குமார், அவரை வழிமறித்து மிரட்டி இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், குமாருக்கு அரசியை பெண் கேட்டு சென்ற காந்திமதி, வீட்டுக்கு வந்து சைலண்டாக அமர்ந்திருக்க, அவரிடம் என்ன ஆச்சு என அனைவரும் கேட்கிறார்கள். அப்போது பழனி, அங்கு நடந்தவற்றை கூறுகிறார். பின்னர் அரசி ஏதாச்சும் சொன்னாலா என குமார் கேட்க, அவளும் எனக்கு குமாரை பிடிக்கலனு சொல்லிட்டா என பழனி சொன்னதும், அவளுக்கு எவ்வளவு திமிரு இருந்தா அப்படி சொல்லிருப்பா, அவளை சும்மா விடமாட்டேன் என எகிறுகிறார். உடனே முத்துவேல் அவரை திட்டிவிட்டு உள்ளே செல்கிறார்.
பின்னர் குமார் கிளம்பி, அரசியை சந்திக்க செல்கிறார். அரசி காலேஜ் விட்டு நடந்து வரும் வழியில் நிற்கும் குமார், அரசியை தடுத்து, என்னை ஏன் பிடிக்கலனு சொன்ன என கேட்டு பிரச்சனை பண்ணுகிறார். அதற்கு அரசி, உன்னை எனக்கு புடிக்காது அதான் அப்படி சொன்னேன் என சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து கார்த்திகேயன் அங்கு வர, அவருடன் சண்டைக்கு போகிறார் குமார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் அரசி, பிரச்சனை பண்ணாம இங்க இருந்து போ என சொல்ல, அவரை அடிக்க கை ஓங்குகிறார் குமார்.
35
குமாரை அடிவெளுத்த பாண்டியன்
அந்த நேரம் பார்த்து குமாரின் நெஞ்சிலேயே ஒருவர் மிதிக்கிறார். அவர் யார் என்று அரசி திரும்பி பார்த்தபோது தான் பாண்டியன் அங்கு நிற்கிறார். எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணு மேலயே கைவைக்க பார்ப்ப, என சொல்லி குமாரை அடிவெளுக்கிறார் பாண்டியன். நீ ஒரு பொறுக்கி உனக்கு என் பொண்ணு கேக்குதா, ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து ஓடிப்போயிடு, இல்லேனா அடிச்சே கொன்றுவேன் என சொல்லி, பளார் பளார் என கன்னத்தில் அறைவிடுகிறார் பாண்டியன். இதையடுத்து அங்கிருந்து தலைதெறிக்க ஓடுகிறார் குமார்.
இதையடுத்து தன் தந்தை சக்திவேலை சந்திக்கும் குமார், பாண்டியன் தன்னை அடிச்ச விஷயத்தை சொல்கிறார். அதற்கு அவர், ஊர்ல இருக்க பரதேசி பையன் கிட்ட அடிவாங்கவா உன்னை பெத்து வளர்த்திருக்கேன். போயும் போயும் அவன்கிட்ட அடிவாங்கிட்டு வந்திருக்க, உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல என கேட்கிறார். ஊர்ல அரசியை விட்டா வேற பொண்ணே கிடையாதா என சக்திவேல் கேட்க, அதற்கு குமார், ஊர்ல நிறைய பொண்ணுங்க இருக்கதான் செய்யுது, ஆனால் என்னை கல்யாணம் பண்ணிக்க தான் எந்த பொண்ணும் ரெடியா இல்லையே என கூறுகிறார்.
55
சக்திவேல் போடும் புது ஸ்கெட்ச்
இதையடுத்து வட்டி பணம் வாங்குவதற்காக சக்திவேல் ஒரு இடத்துக்கு செல்கிறார். அப்போது தங்கமயிலின் அப்பா டீக்கடையில் நின்று ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். தன் மகள் விவாகரத்து விவகாரம் பற்றி அவர் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார் சக்திவேல். தன்னுடைய மாப்ளைக்கு வேறொரு பொண்ணுகூட தொடர்பு இருக்கு என்று சொன்னதை கேட்டுவிடுகிறார் சக்திவேல். தனக்கு இன்னொரு பொண்ணு வேற இருக்கு, அவளை யார் கல்யாணம் பண்ணுவா என தங்கமயிலின் அப்பா புலம்பிக் கொண்டிருக்க, அதையெல்லாம் ஒட்டுக்கேட்ட சக்திவேல், குமாருக்கு அந்த பெண்ணை திருமணம் செய்ய யோசிப்பது போல் தெரிகிறது. இதையடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.