Pandian Stores 2 Serial 29 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசியை பெண்கேட்டு காந்திமதி, பாண்டியன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமார் தனக்கு திருமணம் ஆகவில்லை என்கிற கவலையில் இருக்க, அவருக்கு ஆசையை தூண்டும் விதமாக, அவரிடம் சென்று நான் உனக்கு அரசியை எப்படியாவது கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஆனால் நீ அவளை கஷ்டப்படுத்தாம பாத்துக்கணும் என சத்தியம் வாங்குகிறார். இதையெல்லாம் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பழனி, ஆத்தா ஏதோ பெருசா பிளான் போடுது, அடுத்த பிரச்சனை வெடிக்கப்போகுது என புலம்புகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
வீட்டில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில், காந்திமதி தான் முக்கியமான முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறார். அரசிக்கும், குமாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன் என காந்திமதி சொல்ல, அதைக்கேட்டு ஷாக் ஆன சக்திவேல், அதெல்லாம் நடத்தவிடமாட்டேன் என கூறுகிறார். அப்போது அருகில் இருந்த குமார், நீங்க தான் அவளை காதலிக்க சொன்னீங்க, இப்போ இப்படி மாத்தி பேசுறீங்க என கேட்டதும் கப்சிப் ஆகிறார் சக்திவேல். இதுகுறித்து பாண்டியனிடம் பேச பழனியை அழைத்து செல்கிறார் காந்திமதி.
35
கோமதி வீட்டுக்கு செல்லும் காந்திமதி
கோமதி வீட்டில், பாண்டியன், ராஜி ஆகியோர் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போது காந்திமதி எண்ட்ரி ஆகிறார். அவரை வரவேற்று, சோஃபாவில் உட்கார வைத்த பாண்டியன், என்ன விஷயம் அத்தை என கேட்கிறார். எதுவும் சொல்லாமல் பதற்றத்துடனே இருக்கும் காந்திமதி, தான் அரசியின் கல்யாண விஷயமாக பேச வந்திருப்பதாக சொல்லி, அரசியை என்னுடைய பேரன் குமாருக்கு பெண் கேட்டு வந்திருப்பதாக சொன்னதும், பாண்டியன், கோமதி உள்பட அனைவருமே ஷாக் ஆகிறார்கள்.
இதையடுத்து பேசிய கோமதி, என்னுடைய பொண்ணூக்கு கல்யாணமே பண்ணாம இருந்தாலும் இருப்பேனே தவிர, அந்த பொறுக்கி குமாருக்கு கட்டிவைக்க மாட்டேன் என சொல்லிவிடுகிறார். பின்னர் காந்திமதி குமாருக்கு வக்காளத்து வாங்க, அவரை தடுத்து நிறுத்தும் கோமதி, அவனுக்கு என் பொண்ணை கட்டிவைக்க மாட்டேன் என சொல்கிறார். அப்போது அருகில் இருந்த ராஜியும், அந்த குமார் நல்லவனே இல்லை. அவன் என் அப்பாவையே கொல்லப்பார்த்திருக்கான். அவனைப் போய் எப்படி அரசிக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும் என கூறுகிறார்.
55
நோ சொன்ன அரசி
அந்த நேரம் பார்த்து அரசி ரூமில் இருந்து வெளியே வருகிறார். அவர் காந்திமதியை பார்த்ததும் அவரிடம் எப்படி இருக்கீங்க என நலம் விசாரிக்கிறார். அப்போது அரசியிடம் உங்க அப்பத்தா உன்னை குமாருக்கு பெண்கேட்டு வந்திருக்காங்க என சொன்னதும் அரசி ஷாக் ஆகிறார். உனக்கு அதில் விருப்பமா என பாண்டியன் கேட்க, நான் அவனை கல்யாணம் பண்ண மாட்டேன் என சொல்லிவிடுகிறார். இதையடுத்து காந்திமதியிடம் கட் அண்ட் ரைட்டாக சொல்லும் பாண்டியன், இனிமேல் இதுமாதி பெண்கேட்டு எங்க வீட்டுக்கு வராதீங்க என சொல்லி அனுப்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.